பிறந்தது புத்தாண்டு 2024 : முதல் ஆளாக புத்தாண்டை வரவேற்ற நாடு எது தெரியுமா ?

Jan 01, 2024,12:12 AM IST

டில்லி : அரசியல், விளையாட்டு துறைகளில் சாதனைகள், சினிமா துறையில் இழப்புகள், வரலாறு காணாத மழை, வெள்ளம், முக்கிய நிகழ்வுகள் என இன்பம், துன்பம் இரண்டும் கலந்ததாக இருந்த 2023 ம் ஆண்டு விடைபெற்று சென்றுள்ளது. அனைவருடைய மனதிலும், வாழ்விலும் ஆனந்தத்தை தருவதற்காக புதிய ஆண்டாக 2024  ம் ஆண்டு பிறந்துள்ளது.


உலகம் முழுவதிலும் மக்கள் அனைவரும் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்று, ஆட்டம், பாட்டத்துடன் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். நண்பர்கள், உறவினர்கள் என அனைவருடனும் வாழ்த்துக்களையும், பரிசுகளையும் பகிர்ந்து வருகின்றனர். மற்றொரு புறம் பிறந்துள்ள புத்தாண்டு நன்மையை தருவதாக அமைந்து, உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்பதற்காக கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று வருகிறது.


முதலில் கொண்டாடிய கிரிபாதி




புத்தாண்டு என்றதுமே புத்தாண்டும் பிறக்கும் நேரமான நள்ளிரவு சரியாக 12 மணிக்கு கேக் வெட்டி கொண்டாட வேண்டும், நமக்கு பிரியமானவர்களுக்கு ஹேப்பி நியூ இயர் சொல்லி வாழ்த்த வேண்டும், பட்டாசு வெடித்து ஊருக்கே வாழ்த்து சொல்லி, கொண்டாடி தீர்க்க வேண்டும் என்று தான் அனைவரும் நினைக்கிறோம். ஆனால் உண்மையில் புத்தாண்டை நாம் தான் முதலில் கொண்டாடுகிறோம், முதலில் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறோமா என்றால் கிடையாது.


புத்தாண்டை முதல் ஆளாக வரவேற்பவர்கள் பசிபிக் பெருங்கடலின் ஓசானியா பகுதியில் அமைந்துள்ள கிரிபாதி (Kiribati) என்று தீவை சேர்ந்த மக்கள் தான். இந்த நாடு சர்வதேச எல்லைக் கோட்டின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. க்ரீன்விச் மெரிடியன் நேரத்தின் படி காலை 10 மணிக்கு இந்த நாட்டினர் புத்தாண்டை வரவேற்கின்றனர். அதாவது இந்திய நேரப்படி டிசம்பர் 31ம் தேதி பகல் 03.30 மணிக்கே புத்தாண்டு பிறந்து விட்டது. ஆனால் டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு 12 மணி ஆகும் போது தான் உலகின் மற்ற பகுதிகளில் உள்ள மக்கள் புத்தாண்டை கொண்டாடுகிறார்கள். 



கிரிபதி, நியூசிலாந்து உள்ளிட்ட சில நாடுகள் 2024ம் ஆண்டு புத்தாண்டை ஏற்கனவே கொண்டாடி முடித்து விட்டார்கள். ஆனால் International date line படி மற்ற நாடுகள் இதே நேரத்தில் புத்தாண்டை கொண்டாடுவது கிடையாது. பெரும்பாலான நாடுகள் புத்தாண்டு பிறந்ததற்கு மறுநாள் தான் அதனை கொண்டாடுகிறார்கள். கிரிபதி நாட்டை தொடர்ந்து Tonga, Samoa ஆகிய தீவுகளை சேர்ந்த மக்களும், அதற்கு பிறகு மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஃபிஜி, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளும் புத்தாண்டை கொண்டாடின.


முதல் பெரிய நாடு நியூசிலாந்து


பெரிய நாடுகள் என்று கணக்கெடுத்தால் நியூசிலாந்து தான் புத்தாண்டை முதலில் கொண்டாடிட நாடாக உள்ளது. இவர்கள் க்ரீன்விச் நேரத்தின் படி டிசம்பர் 31ம் தேதி காலை 11 மணிக்கும், இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா நாட்டினர் டிசம்பர் 31ம் தேதி பகல் 1 மணிக்கும், ஜப்பான், தெற்கு மற்றும் வட கொரியா நாட்டினர் டிசம்பர் 31ம் தேதி பகல் 3 மணிக்கும், சீனா, மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங், பிலிப்பைன்ஸ் நாட்டினர் டிசம்பர் 31ம் தேதி மாலை 4 மணிக்கும், தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா நாட்டினர் டிசம்பர் 31ம் தேதி மாலை 5 மணிக்கும் புத்தாண்டை வரவேற்றனர்.


அதற்கு பிறகு தான் இந்தியா, இலங்கை, ஐக்கிய அரபு அமீரம், ஓமன், தென்னாப்பிரிக்கா, எகிப்து, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, ஐரோப்பா, போர்ச்சுகல், பிரேசில், சிலி உள்ளிட்ட நாடுகள் புத்தாண்டை கொண்டாடுகின்றன. 


இந்திய நேரப்படி ஜனவரி 01ம் தேதி காலை 10.30 மணிக்கு தான் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதி மக்கள் புத்தாண்டை கொண்டாடுகிறார்கள். புத்தாண்டை கடைசியாக கொண்டாடும் நாடு பேக்கர் (Baker) மற்றும் ஹவ்லேந்த் (Howland) தீவுகளை சேர்ந்தவர்கள் தான். இவர்களுக்கு இந்திய நேரப்படி ஜனவரி 01ம் தேதி மாலை 05.30 மணிக்கு தான் இந்த பகுதிகளில் புத்தாண்டு பிறக்கிறது.


எப்ப பொறந்தா என்னங்க.. எல்லோரும் சந்தோஷத்துடனும், நம்பிக்கையுடனும் 2024ம் ஆண்டை வரவேற்போம்.. எல்லோருக்கும் இனிமையையும், வளத்தையும், நலத்தையும் இந்த ஆண்டு வழங்கட்டும்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்