செம மழை.. தென் கிழக்கு வங்கக் கடலில்.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!!

Nov 14, 2023,10:38 AM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய  காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


கடந்த வாரம் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து தமிழகம் முழுவதும் அனேக இடங்களில் பரவலாக  மழை பெய்து வந்தது. தமிழக அரசு தீபாவளி பண்டிகைக்காக நமக்கு எப்படி இரண்டு நாட்கள் விடுமுறை கொடுத்ததோ .. அது போல் மழையும் இரண்டு நாட்கள் விடுமுறை கொடுத்தது. தற்போது மீண்டும் கன மழை தொடங்கியுள்ளது.


தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலெடுக்க சுழற்சி நிலவி வந்தது. இது மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது. இது நாளை மேலும் வலுவடைந்து தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும்.




புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு கன மழை பெய்ய கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வட கடலோர மாவட்டங்களில் இன்று  கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக் கூடும். மேலும் வருகின்ற 17ஆம் தேதி வரை மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


கன மழை எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.


பாலிடெக்னிக் தேர்வுகள்  ஒத்திவைப்பு


கனமழை காரணமாக தமிழ்நாட்டில்  பாலிடெக்னிக் கல்லூரிகளில் இன்று நடைபெற உள்ள பட்டயத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.


தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் இன்று காலை முதல் பரவலாக கன மழை பெய்து வருகிறது. இதனால்  பல மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாலிடெக்னிக் கல்லூரிகளில் இன்று நடைபெற உள்ள பட்டய தேர்வுகள் மற்றும் டிப்ளமோ போன்ற தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.


மேலும் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறும் தேதி குறித்த விபரம் https://dte.tn.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்