Earthquake: கிடுகிடுன்னு அதிர்ந்த டெல்லி.. மக்கள் பீதி.. ஆபத்தில்லை!

Oct 15, 2023,05:12 PM IST
டெல்லி: தலைநகர் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.

அக்டோபர் 3ம் தேதிதான் இதேபோன்ற ஒரு நிலநடுக்கம் டெல்லி உள்ளிட்ட தேசிய தலைநகரப் பகுதிகளை தாக்கியது. அதேபோன்றதொரு நிலநடுக்கம் இன்றும் உணரப்பட்டது.

இன்றைய நிலநடுக்கத்தின் மையமானது, ஹரியானா மாநிலம் பரீதாபாத்தில் இருந்தது. பூமிக்குக் கீழே 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அளவு 3. 1 ரிக்டராக இருந்தது. மாலை 4 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.



இந்த நிலநடுக்கத்தால் வீடுகளில் லேசான நடுக்கத்தை மக்கள் உணர்ந்தனர். இதையடுத்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். ஆனால் சில விநாடிகளே இந்த நிலநடுக்கம் நீடித்தது. பின்னர் இயல்பு நிலை திரும்பியது. நிலநடுக்கத்தால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

அடிக்கடி டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் இதை வைத்து பலரும் மீம்ஸ் போட்டு டிவிட்டரில் கலாய்த்துக் கொண்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

எடப்பாடி பழனிச்சாமி, நயினார் நாகேந்திரன் திடீர் ஆலோசனைக் கூட்டம்.. என்னவாக இருக்கும்..?

news

Today gold price: இதுக்கு ஒரு என்டு கார்டே இல்லையா... 1 கிராம் ரூ.10,000த்தை நெருங்கும் தங்கம் விலை!

news

அடிக்கிற வெயிலுக்கு லெமன் ஜூஸை குடிக்க நினைத்தால்.. எலுமிச்சை விலை அதிரடி உயர்வு..!

news

98 வது ஆஸ்கர் விருது விழா எப்போது நடைபெறும்..? தேதி குறிச்சாச்சு!

news

பிளாஸ்டிக் வேண்டாம்.. வேண்டவே வேண்டாமே.. கிரிஷ் சொல்லியாச்சு.. அப்ப நீங்க?.. கதையல்ல நிஜம்!

news

Today is Earth Day.. நம்மைக் காக்கும் அன்னை.. பூமியைக் காக்க விழித்துக்கொள்வோம்!

news

போப் ஆண்டவர் பிரான்சிஸ் மறைவையொட்டி.. மூன்று நாட்கள் துக்கம் அனுசரிப்பு.. மத்திய அரசு!

news

Summer Rains.. தமிழ்நாட்டில்.. அடுத்த ஒரு வாரத்திற்கு வெயில் + மழை.. இதாங்க நிலவரம்..!

news

Election of new Pope: புதிய போப்பாண்டவர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்?

அதிகம் பார்க்கும் செய்திகள்