திமுகவுக்கு 221.. அதிமுகவுக்கு 10.. பாமக 3.. தேதிமுக 2.. அடடே டேட்டா.. இதுல பாஜகவுக்கு எத்தனை?

Jun 08, 2024,09:59 PM IST

சென்னை:  நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணிக்கு 221 சட்டசபைத் தொகுதிகளில் முதலிடம் கிடைத்துள்ளது. அதிமுகவுக்கு 10 தொகுதிகளும்,  பாமகவுக்கு 3 தொகுதிகளிலும், தேமுதிகவுக்கு 2 தொகுதிகளிலும் முதலிடம் கிடைத்துள்ளது. அதேசமயம், பாஜகவுக்கு ஒரு தொகுதியில் கூட முதலிடம் கிடைக்கவில்லை.


லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2019 தேர்தலில் 38 தொகுதிகளில் மட்டுமே வென்றிருந்த நிலையில் தற்போதைய தேர்தலில் மிச்சமிருந்த ஒன்றையும் சேர்த்து வாரிக் கொண்டு போய் விட்டது திமுக. 




தமிழ்நாட்டில் சில தொகுதிகள் கண்டிப்பாக கிடைக்கும் என்று பாஜக மிகவும் ஆவலோடு எதிர்பார்த்திருந்தது. இதற்காகவே பெரிய தலைவர்களை களத்தில் இறக்கியது. அவர்களும் கடுமையான போட்டியைக் கொடுத்தனார். ஆனால் கூட்டணி பலமாக இல்லாததால் பாஜகவுக்கும் சரி, அதன் முன்னாள் பங்காளியான அதிமுகவுக்கும் சரி ஒரு தொகுதியிலும் வெற்றி கிடைக்கவில்லை.


இந்த நிலையில் ஒரு சுவாரஸ்யமான டேட்டா வெளியாகியுள்ளது. அதாவது தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டசபைத் தொகுதிகளிலும் எந்தக் கட்சி முதலிடம் பிடித்துள்ளது என்ற புள்ளிவிவரம் தான் அது. அதில் திமுக கூட்டணிதான் அதிக அளவிலான தொகுதிகளில் அதாவது 221 சட்டசபைத் தொகுதிகளில் முதலிடத்தைப் பிடித்துள்ளது என்று தெரிய வந்துள்ளது.


இதில் வேடிக்கை என்னவென்றால், அதிமுக, பாமக, தேமுதிகவெல்லாம் கூட சில தொகுதிகளில் முதலிடம் பிடித்துள்ளன. ஆனால் பாஜகவுக்கு ஒரு தொகுதியில் கூட  முதலிடம் கிடைக்கவில்லை என்பதுதான். இந்த டேட்டா ஆச்சரியமளிக்கிறது.. கூடவே, 2026 தேர்தலுக்கான ரிசல்ட் இப்படித்தான் இருக்குமோ என்றும் எண்ண வைக்கிறது.


நிச்சயம் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு இந்த டேட்டாவும் கை கொடுக்கும்.. 2026 தேர்தலுக்கான திட்டமிடலை வகுக்க.


சரி, டேட்டாவைப் பார்ப்போம்.


திமுக கூட்டணி முன்னிலை நிலவரம்:


6 சட்டசபைத் தொகுதிகளிலும் முன்னிலை பெற்ற நாடாளுமன்றத் தொகுதிகள் (மொத்தம் 221 சட்டசபைத் தொகுதிகள்):


திருவள்ளூர், தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னை,   ஸ்ரீ பெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை,  ஆரணி, கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, திண்டுக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை, தேனி, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி.


மற்ற தொகுதிகளில் முதலிட நிலவரம்


ஈரோடு, சேலம் - தலா 5 தொகுதிகள், விருதுநகர், சிதம்பரம், நாமக்கல், விழுப்புரம் - தலா 4 , தர்மபுரி - 3 


அதிமுக முன்னிலை பெற்ற தொகுதிகள் விவரம் (மொத்தம் 8 தொகுதிகள்):


சிதம்பரம், நாமக்கல், விழுப்புரம் - (தலா 2  தொகுதிகள்). ஈரோடு, சேலம் - (தலா 1)


சட்டசபைத் தொகுதிகள் விவரம்: திருக்கோவிலூர், உளுந்தூர்ப்பேட்டை, எடப்பாடி, சங்ககிரி, பரமத்திவேலூர், குமாரபாளையம், அரியலூர், ஜெயங்கொண்டம்.


பாஜக கூட்டணியில் பாமக முன்னிலை பெற்ற தொகுதிகள் நிலவரம் (மொத்தம் 3 தொகுதிகள்):


தர்மபுரி -  பென்னாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி.


தேமுதிக முன்னிலை பெற்ற தொகுதிகள் (மொத்தம் 2 தொகுதிகள்):


விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் - திருமங்கலம், அருப்புக்கோட்டை.

சமீபத்திய செய்திகள்

news

ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடினுக்கு மேலும் 2 மகன்கள் உள்ளனராம்.. யார் மூலமா தெரியுமா?.. பரபர தகவல்!

news

ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பினார் மகாவிஷ்ணு.. சைதாப்பேட்டை போலீஸ் கிடுக்கிப்பிடி விசாரணை!

news

ஸ்டிரைக் அறிவிப்பை மறு பரிசீலனை பண்ணுங்க.. தயாரிப்பாளர்களுக்கு நடிகர் சங்கம் கோரிக்கை

news

சின்னத்திரையில் பாலியல் அத்துமீறல்கள் கிடையாது.. எல்லாமே மியூச்சுவல்தான்.. நடிகையின் ஸ்டேட்மென்ட்!

news

28வது வருட திரையுலக வாழ்க்கையில் சிம்ரன்.. தி லாஸ்ட் ஒன்.. நாயகியாக மீண்டும் ரீ என்ட்ரி!

news

விதம் விதமான விநாயகர்கள்.. தமிழ்நாடு முழுவதும் 35,000 சிலைகள்.. விநாயகர் சதுர்த்தி கோலாகலம்

news

விளையாட்டுக் களத்திலிருந்து.. அனல் பறக்கும்.. தேர்தல் களத்திற்கு என்ட்ரி கொடுக்கும் வினேஷ் போகத்!

news

செப்டம்பர் 07 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

ரிஷப ராசிக்காரர்களே... திறமை வெளிப்படும் காலமிது

அதிகம் பார்க்கும் செய்திகள்