சென்னை: வரும் நவம்பர் 18 ஆம் தேதி நயன்தாரா பிறந்தநாளை முன்னிட்டு, நயன்தாரா: பியான் தி ஃபேரிடேல் என்ற டாக்குமென்டரியை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரிலீஸ் செய்யவுள்ளது. ரசிகர்கள் மத்தியில் இது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சரத்குமார் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் நயன்தாரா. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதுடன், ஆண் ரசிகர் மனதிலும் நயன்தாரா ஆணித்தரமாக கால் பதித்தார்.
இதனைத் தொடர்ந்து இவரின் நடிப்பின் திறமையால் இவருக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உருவானது. தொடர்ந்து விஜய், அஜீத் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்த நயன்தாரா தற்போது பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து தமிழ் திரையுலகில் தொடர்ந்து வெற்றி நடிகையாக வலம் வருகிறார்.
தமிழ் சினிமாவில் 2010 களில் தொடங்கி இன்று வரை நடித்து வரும் நயன்தாரா, லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் அளவிற்கு உயர்ந்தும் இருக்கிறார். தமிழில் லேடி சூப்பர்ஸ்டாராக அழைக்கப்படும் முதல் நடிகை இவர்தான். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, என பல்வேறு மொழிகளிலும் நடித்து அசத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நயன்தாராவின் வாழ்க்கையில் அவர் சந்தித்த ஏற்ற இறக்கங்கள், சினிமாவில் அவரது வெற்றிமுகம், திருமணம் ஆகியவை குறித்து நயன்தாரா பியாண்ட் தி ஃபேரிடேல் என்ற டாக்குமென்ட்ரி எடுத்துரைக்க இருக்கிறது. இந்த டாக்குமென்டரி நயன்தாராவின் பிறந்த நாளான வரும் நவம்பர் 18ஆம் தேதி அன்று netflix ஓடிடி தளத்தில் எக்ஸ்க்ளூசிவாக பிரீமியமாக உள்ளது.
நயன்தாராவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அதிகம் வெளியில் பகிரப்படாத மற்றும் இதுவரை கண்டிராத அழகிய பக்கத்தை இந்த டாக்குமெண்டரி மூலம் ரசிகர்கள் கண்டு களிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாம். மேலும் தங்கள் கனவுகளையும் லட்சியங்களையும் அடைய நினைப்பவர்களுக்கு இந்த டாக்குமென்ட்ரி உத்வேகமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஒரு மகளாக, சகோதரியாக, வாழ்க்கைத் துணையாக, அம்மாவாக, தோழியாக, தொழில் துறையில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக, நயன்தாராவின் பல முகங்களை இந்த டாக்குமெண்டரியில் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியா முழுவதும் உள்ள நயன்தாரா ரசிகர்களுக்கு இந்த பிறந்தநாள் பரிசு எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பெஞ்சல் புயல்: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரேஷன் கார்டுக்கு ரூ.2000 நிவாரணம் .. முதல்வர் ஸ்டாலின்
உள்நோக்கத்தோடு அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியுள்ளனர்.. அமைச்சர் பி.கே.சேகர்பாபு புகார்
சாத்தனூர் அணை திறப்பு.. குறை கூறும் அதி மேதாவிகளே இதைப் படிங்க.. துரைமுருகன் விரிவான அறிக்கை!
சாத்தனூர் அணை விவகாரம் .. தமிழ்நாடு அரசுக்கு.. டாக்டர் அன்புமணி ராமதாஸின் 7 கேள்விகள்!
புயல் பாதித்த குடும்பங்களை.. தவெக அலுவலகத்திற்கு அழைத்து வந்து.. உதவிகள் வழங்கிய விஜய்
Cooking Tips.. இட்லி, தோசை, சப்பாத்தியுடன் சாப்பிட மிகவும் சுவையான .. கடாய் காளான் கிரேவி!
அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விட்டதே பாதிப்பிற்கு காரணம்: அண்ணாமலை குற்றச்சாட்டு
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட.. தமிழ்நாட்டு மக்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆறுதல்!
கருத்து சுதந்திரம்.. சினிமா விமர்சனங்களை வெளியிட தடை விதிக்க முடியாது... சென்னை ஹைகோர்ட் அதிரடி
{{comments.comment}}