- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: பித்தம் தணிக்க நெல்லிக்காய் .. இந்தப் பழமொழி கேட்டிருக்கீங்களா.. அருமையான ஒன்றுங்க.. நம்ம முன்னோர்கள் சொல்லி வைத்து விட்டுச் சென்ற அருமையான பழமொழி இது. உணவுப் பழக்கத்துக்காக கூறப்பட்டது இது.
பித்தம் தணிக்க நெல்லிக்காய்:
நமது உடல் வாதம், பித்தம் கபம் என எந்த தன்மையோடு இருந்தாலும் பெரிய நெல்லிக்காய் நம் உடலை சமன் செய்வதில் சிறந்த பங்கு வகிக்கிறது. உடலில் உள்ள பித்தத்தை தணிக்க ஆம்லா எனப்படும் நெல்லிக்காய் அதீத நன்மை வகிக்கிறது. இதனை பற்றி இங்கு பார்ப்போம் வாருங்கள் பிரண்ட்ஸ்.
நெல்லிக்கனி பயன்படுத்தும் முறைகள்:
1. ஒரு நெல்லிக்காயை பொடியாக நறுக்கி நன்றாக ஜூஸ் போட்டு தேன் அல்லது பனங்கற்கண்டு அல்லது இந்து உப்பு போட்டு குடிக்கலாம். இதனை ஒவ்வொரு முறையும் சிறிது சிறிதாக குடிக்க உடல் உஷ்ணத்தை குறைத்து பித்தம் தணிக்க உதவும்.
2. நெல்லிக்காய் தயிர் பச்சடி அதாவது நெல்லிக்காய் துருவல் அல்லது பொடியாக கட் செய்து தயிரில் கலந்து சாப்பிட வயிற்றுப்புண் அமிலத்தன்மை குறையும். நெல்லி பொடியையும் தயிர் உடன் சாப்பிடலாம்.
3. நெல்லிக்கனி எலுமிச்சையுடன்: இவ்விரண்டையும் சம அளவில் ஜூஸ் செய்து தண்ணீர் கலந்து உட்கொள்ள பித்தம் குறையும்.
4. எலுமிச்சை சாதம் செய்யும் போது சிறிது நெல்லி துருவலையும் சேர்த்து சாப்பிடலாம்.
5. நெல்லிக்காயை உலர்த்தி காய வைத்து பொடியாக செய்து தேன் அல்லது உப்பு சேர்த்து சாப்பிடலாம்.
6. நெல்லி தொக்கு செய்து இட்லி சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
நெல்லிக்காயின் பயன்கள்:
* நெல்லிக்கனியில் இயற்கையாகவே தண்ணீர் சத்து மற்றும் வைட்டமின் சி நிறைந்ததால் இது பித்தத்தை சமநிலைப்படுத்தும் தன்மை கொண்டது.
* இளநரை தடுக்கும்
* செரிமானத்தை மேம்படுத்துகிறது.
* இரத்த சர்க்கரை அளவு, ரத்த கொதிப்பு கட்டுப்படும்.
* இதயத்திற்கு உகந்தது, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ,மற்றும் உடல் எடை குறைக்கும்.
* கண்களுக்கு மிகவும் நல்லது .
* சருமத்திற்கு பாதுகாப்பு தருகிறது.
* ரத்தத்தை சுத்திகரிக்கிறது .
* தைராய்டு சுரப்பை சமநிலைப்படுத்த உதவுகிறது.
* இதில் ஆண்டி ஆக்சிடென்ட் நிறைந்துள்ளது.
* நரம்பு ஆரோக்கியம் மேம்படுகிறது.
நெல்லிக்கனியில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய சுவைகள் நிறைந்துள்ளது .உடலில் பித்தம் அதிகமாகும் போது உடல் சூடு ,அஜீரணம், மலம் கடினமான மாற்றம் , அல்சர் ,கோபம் வாயில் உப்பு சுவை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவை அனைத்திற்கும் ஒரே மருந்து பித்தம் தணிக்கும் நெல்லிக்கனி சிறந்த உணவாக இருக்கும்.
வக்பு வாரிய சட்ட மசோதா நாளை தாக்கல்.. எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி எம்.பிக்கள் முடிவு
தமிழ்நாட்டில் வெப்பநிலை படிப்படியாக ..2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்..!
வழக்கத்தைவிட.. ஏப்ரல், ஜூனில் வெப்பம் அதிகரிக்கும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..!
Emburan Movie: பெரியாறு அணை குறித்து அவதூறு கருத்துகளை நீக்குக.. பண்ருட்டி வேல்முருகன்..!
Madurai Chithirai Thiruvizha 2025: மீனாட்சி அம்மன் கோவிலில்..ஏப்ரல் 29ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்..
அருவறுப்பான ஆண்களே அழிஞ்சு நாசமா போங்க.. பாடகி சின்மயி ஆவேசம்!
கும்பகோணம் வெற்றிலைக்கும் தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு!
டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு.. ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம்.. வெளியானது அரசு உத்தரவு..!
தமிழகத்தில் ஆட்சி அமைப்போம்.. அமித்ஷா கூறியது நகைச்சுவை:விசிக தலைவர் திருமாவளவன்!
{{comments.comment}}