Neet Zero percintile.. "தப்புத் தப்பாக விமர்சிக்கிறார்கள்".. டாக்டர் தமிழிசை சாடல்!

Sep 22, 2023,04:56 PM IST

புதுச்சேரி: உயர் கல்வியில் நீட் மதிப்பெண் விகிதம் பூஜ்ஜியம் சதவீதமாக இருந்தாலும் அவர்களையும் அனுமதிக்கலாம் என்கிற செய்தியை சிலர் விமர்சிக்கிறார்கள். ஜீரோ பர்சன்டைல் என்றால் தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவர்கள் அந்த சீட்டை எடுக்காமல் இருந்தால், இடங்கள் காலியாக இருக்கும்பட்சத்தில் அந்த வரிசையில் கடைசியில் இருந்தால் கூட அவர்கள் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.


திருச்சி, கிராமாலயா மற்றும் டெட்டால் பனேகா ஸ்வஸ்த் இந்தியா  சார்பில் டெட்டால் பள்ளிச் சுகாதாரக் கல்வி நிகழ்ச்சி புதுச்சேரி சன்வே மேனர்  ஹோட்டலில் நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் தொடங்கி வைத்தார். புதுச்சேரி போக்குவரத்து அமைச்சர் சந்திர பிரயங்கா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சியில் டாக்டர் தமிழிசை ஆற்றிய உரையிலிருந்து:


2014 ஆம் ஆண்டு சுதந்திர தின உரையில் பாரதப் பிரதமர் ஸ்வச் பாரத் தூய்மை இந்தியா திட்டத்தை அறிவித்தார். அவர் பேசுவையில் “உங்களுக்கு சுதந்திரமான இந்தியா முதலில் வேண்டுமா? அல்லது சுகாதாரமான இந்தியா வேண்டுமா? என்று கேட்டால் எனக்கு முதலில் சுகாதாரமான இந்தியாதான் வேண்டும் என்பேன். ஏனென்றால் சுகாதாரமான இந்தியா தான் சுதந்திரமான இந்தியாவை உருவாக்க முடியும்” என்று தெரிவித்தார்.


ஸ்வச் பாரத் தூய்மை இந்தியா திட்டத்தை பாரதப் பிரதமர் முன்னெடுத்ததன் மூலம் கை கழுவாதது, குப்பைகள் சேருவது போன்றவற்றால் வரும் நோய்கள் தடுக்கப்பட்டு இருக்கிறது. அதனால் ஏற்படவிருந்த 16 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு முதல் வருடத்திலேயே தடுக்கப்பட்டது. சுத்தம் சோறு போடும் என்பது, சுத்தமாக இருந்தால் நோய் வராது; ஆரோக்கியமாக இருந்து நல்ல உணவினை உண்ண முடியும் என்பது தான் பொருள். 

கந்தையானாலும் கசக்கி கட்டுபோன்ற பல ஆண்டுகளுக்கு முன்னாலேயே தமிழர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.


சுயநலம் இல்லாமல் யார் நாட்டிற்காக பணியாற்றுகிறார்களோ அவர்களை அனைவருக்கும் பிடிக்கும். குழந்தைகளுக்கு எது செய்தாலும்; அது வருங்காலத்துக்கு நாம் செய்யும் உதவியாக இருக்கும்.  அதனால்தான் நேற்றைய தினம் துணைநிலை ஆளுநர் நிலையத்தில் “திறமை தேடல்“ என்கிற நிகழ்ச்சி நடைபெற்றது. உண்மையிலேயே அரசு பள்ளி மாணவர்கள் திறமையாக இருக்கிறார்கள்.  புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி சேர்க்கையில் 10% இடஒதுக்கீட்டை அரசு வழங்கியிருக்கிறது. 


நீட் ஆனது மாணவர்க்ளுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறது. ஆனால் அரசியல் ரீதியாக இது தவறாக சித்தரிக்கப்பட்டு இருக்கிறது. நேற்று, உயர் கல்வியில் நீட் மதிப்பெண் விகிதம் பூஜ்ஜியம் சதவீதமாக இருந்தாலும் அவர்களையும் அனுமதிக்கலாம் என்கிற செய்தியை அரசு அறிவித்திருந்த நிலையில், பலர் அதற்கு விமர்சனம் சொல்லி இருந்தார்கள். 


பூஜ்ஜியம் மதிப்பெண் வாங்கினாலே அவர்கள் மருத்துவ சேர்க்கையில் அனுமதிக்கப்படுவார்கள் என்கிற தவறான பிம்பம் சித்தரிக்கப்பட்டு வருகிறது.  ஜீரோ பர்சன்டைல் என்றால் தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவர்கள் அந்த சீட்டை எடுக்காமல் இருந்தால், இடங்கள் காலியாக இருக்கும்பட்சத்தில் அந்த வரிசையில் கடைசியில் இருந்தால் கூட அவர்கள் தேர்ந்தெடுக்கப்படலாம்.


எனவே, நீட் எழுதுவதிலும் தரவரிசை வருவதிலும் மதிப்பெண் பெறுவதிலும் பிரச்சனை இல்லை. மருத்துவத்தில் குறிப்பாக சில மருத்துவம் சாராத துறைகளில் இடங்கள் காலியாக இருப்பதினால் இத்தகைய அறிவிப்பு அரசால் கொண்டு வரப்பட்டுள்ளது. எதுவும் வீணாகாமல் அனைவருக்கும் பயன்பட வேண்டும் என்பதையே பாரதப் பிரதமர் நோக்கமாகக் கொண்டு இதனை அறிவித்திருக்கிறார் என்றார் தமிழிசை செளந்தரராஜன்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்