மலையாள நடிகர்களில் "இன்னொசன்ட்" முக்கியமானவர். அவருக்கு அடுத்து நெடுமுடி வேணு அற்புதமான கலைஞர். அவரது இயல்பான நடிப்பு மட்டுமல்லாமல், அவரது வசன உச்சரிப்பு திறனுக்காகவே அவரது படங்களை ரசித்துப் பார்ப்பவர்கள் பலர். அழுத்தம் திருத்தமான ஒரு நடிகர்.
"வாத்தியார் மகன் மக்கு" என்று ரொம்ப காலமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.. ஆனால் நெடுமுடி வேணு அப்படி இல்லை.. சின்ன வயதிலேயே மிருதங்கத்தில் பிரித்து மேய்வார். நல்ல கதை சொல்லியும் கூட.. சினிமா மீது தீராத தாகம் அந்த சின்ன வயதிலேயே அவருக்குள் ஊறிக் கொண்டே இருந்தது.. அப்பா வாத்தியார் என்பதால் டிசிப்ளின் நிறைந்த பிள்ளையாக வளர்ந்தவர் வேணு.
சினிமா, கலை மீதான தாகம் ஒரு பக்கம் இருந்தாலும் படிப்பிலும் படு கெட்டியாக இருந்தார். அப்பாவுக்குத் திருப்தி தரும் வகையில் சூப்பராகவே படித்தார். பட்டப்படிப்பை முடித்த கையோடு பத்திரிகையாளராக மாறினார். அதன் பிறகு சினிமா பக்கம் திரும்பினார். அவருக்குள் இருந்த சினிமா தாகத்தை தீர்க்க வடிகாலாக அமைந்தவர் இயக்குநர் அரவிந்தன்தான். இருவருக்கும் இடையே நல்ல நட்பு. இந்த நண்பர்கள் வட்டாரத்தில் மலையாளத் திரையுலகின் பீஷ்மர்களில் ஒருவரான கோபியும் அடக்கம்.. இந்த நட்பு வட்டாரம் திரையுலகில் பல மகத்தான படைப்புகளை படைத்து மலையாளிகளுக்கு விருந்து சமைத்தது.
அடிப்படையில் நெடுமுடி வேணு ஒரு நாடகக் கலைஞர். நாடகங்கள் அவரது நடிப்புக்கு நல்ல அடித்தளம் அமைத்தது. இதனால்தான் சினிமாவில் அறிமுகமான முதல் படமான தம்புவிலேயே அவர் சபாஷ் வாங்கினார். நண்பரான அரவிந்தன்தான் தம்பு மூலம் நெடுமுடி வேணு என்ற ஒரு அருமையான கலைஞரை வெளியுலகுக்குக் காட்டினார். தொடர்ந்து வந்த படங்கள் மூலம் தனது அருமையான கேரக்டர் நடிப்பை வெளிப்படுத்தி தனது பிரவேசத்தை இன்னும் வலுவாக்கிக் கொண்டார் நெடுமுடி வேணு.
அந்தக் காலத்தில் நெடுமுடி வேணுவின் குடும்பத் தலைவர் கதாபாத்திரங்கள் ஒரு டிரெண்ட் செட்டாக அமைந்தது என்பதையும் இங்கு சொல்ல வேண்டும். இதே பாணியில் பல கலைஞர்கள் உருவெடுக்க நெடுமுடி வேணுதான் விதையாக அமைந்தார். ஒரு பக்கம் நடிப்பு, மறுபக்கம் ஸ்கிரிப்ட் ரைட்டர், இன்னொரு முகமாக இயக்கம் (ஒரே ஒரு படம் - பூரம்) என சகலகலா வல்லவனாக மிளிர்ந்து வந்தார் வேணு. இவரது படங்களில் மலையாளிகளால் மறக்க முடியாத படம் என்றால் அது ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா மற்றும் மார்க்கம். இரண்டுமே அவருக்கு தேசிய விருதுகளை வாங்கிக் கொடுத்தது. அதேபோல சமரம். இன்னொரு அற்புதமான படம். பரதம் படத்தில் இவரது நடிப்பு வேறு லெவலில் இருக்கும். மலையாளப் படங்கள் மற்ற இந்திய மொழிப் படங்களை விட வேறு பரிமாணத்தில் அமைய வேணு போன்ற ஒப்பற்ற கலைஞர்கள் அங்கு இருந்ததே காரணம்.
தேன்மாவின் கொம்பத்து மறக்க முடியாத வேணுவின் படங்களில் ஒன்று. இந்தப் படத்தைத்தான் முத்து என்ற பெயரில் தமிழில் எடுத்தார்கள். மலையாள சினிமாவின் முக்கியமான படங்களில் இந்தப் படத்துக்கும் முக்கிய இடம் உண்டு. வேணுவின் நடிப்பு இதில் பிரமாதமாக இருக்கும். சித்ரம் படம் வேணுவுக்கு மட்டுமல்லாமல் மோகன்லாலுக்கும் மிகப் பெரிய ஹிட் கொடுத்த படம். ஒரு விசேஷப்பட்ட பிரியாணி கிஸ்ஸா என்ற படத்தில் நெடுமுடி வேணுவின் ரோல் அருமையாக இருக்கும்.
போக்கிரி சைமன் என்றொரு குப்பைப் படம். ஆனாலும் அதிலும் கூட அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் வேணு. ஆகாசத்திண்டே நிறம் என்று ஒரு படம். அதிகம் வசனம் இருக்காது. வருவார் போவார்.. அவ்வப்போது கண்ணை சிமிட்டுவார்.. சின்னச் சின்ன வசனங்கள்.. அழகான கேரக்டர் அந்தப் படத்தில் வேணுவுக்கு. ஒரு ஆர்ட் படம்தான்.. ஆனாலும் அந்தப் படம் முழுக்க வேணுவின் நடிப்பு அத்தனை தெளிவாக, இயல்பாக, அற்புதமாக இருக்கும். நிறையப் படங்கள்.. சொல்லிக் கொண்டே போகலாம்.
எத்தனையோ நல்ல படங்களுக்கு வேணு பெயர் போனவர்.. அவர் நடித்த எந்தப் படத்திலும் அவர் சோடை போனதில்லை. தமிழிலும் கூட அவருக்கு சில நல்ல படங்கள் அமைந்தன. மோகமுள் அவருக்கு தமிழில் முதல் படம். கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி இந்திய அளவில் மிரட்டலைக் கொடுத்த இந்தியன், நெடுமுடி வேணுவுக்கும் பெயர் வாங்கித் தந்த படம். இதுதவிர மேலும் சில படங்களில் நடித்திருந்தாலும் இந்தியனிலும், மோகமுள்ளிலும் அவரது நடிப்புக்கேற்ற தரத்துடன் கூடிய ரோல்கள் அமைந்திருந்தன என்று சொல்லலாம்.
நல்லதொரு தெளிவான நடிகர் நெடுமுடி வேணு.. ஆராட்டு படம்தான் அவரது கடைசிப் படம். அது வெளியாவதற்குள்ளேயே அவர் மறைந்தது துயரம்தான்.
நெடுமுடி வேணுவின் நினைவு தினம் இன்று.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!
சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!
தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!
அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!
ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும். சட்டசபையில் அறிவிப்பு!
வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்
வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!
{{comments.comment}}