ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பயணிகள்.. அதுல ஹைலைட்டே 8ம் தேதிதான்.. அசத்தும் சென்னை மெட்ரோ!

May 02, 2024,06:39 PM IST

சென்னை: இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மட்டும் 80.87 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர் என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.


சென்னையில் உள்ள மக்களுக்கு பெரும் சவால் விடுத்து வந்த பிரச்சனைகளுள் ஒன்று போக்குவரத்த நெரிசல். அந்த போக்குவரத்து நெரிசலில் இருந்து பொதுமக்கள் தப்பிப்பதற்காக கொண்டு வரப்பட்டது தான் மெட்ரோ ரயில் திட்டம். இந்த திட்டம் ரயில் பயணிகளுக்கு துரிதமான மறறும் பாதுகாப்பான பயணத்தையும் வசதியையும் வழங்கி வருகிறது என்றால் அது மிகையல்ல என்றே சொல்லலாம். சமீப காலமாக அதிகளவில் மக்கள் இந்த மெட்ரோ சேவையை பெற்று வருகின்றனர்.  




ஏப்ரலில் மட்டும் மெட்ரோ ரயில்களில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக மெட்ரோ நிறுவனம் கூறியுள்ளதாவது:


2024 ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணித்தனர். ஜனவரி மாதம் மொத்தம் 84,63,384 பயணிகள் பயணம் செய்துள்ளனர். அதேபோல பிப்ரவரியில், 86,15,008 பயணிகளும், மார்ச் மாதம் 86,82,457 பயணிகளும் மெட்ரோவில் பயணித்துள்ளனர்.  01.04.2024 முதல் 30.04.2024 வரை மொத்தம் 80,87,712 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 08.04.2024 அன்று 3,24,055 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.


2024, ஏப்ரல் மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 33,34,498 பயணிகள் (Online QR 1,88,118; Static QR 2,18,565; Paper QR 19,58,328; Paytm3,76,100; Whatsapp - 3,55,571; PhonePe – 2,26,008; ONDC – 11,808), பயண அட்டைகளை(Travel Card Ticketing System) பயன்படுத்தி 33,23,602 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 61,976 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 4,285 பயணிகள் மற்றும்   சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 13,63,351 பயணிகள்மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.


சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர்குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), வாட்ஸ்அப் டிக்கெட், Paytm App மற்றும் PhonePe போன்ற அனைத்து வகையாக பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை பெற்று கொள்ளலாம்.


மெட்ரோ இரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி என்று கூறப்பட்டுள்ளது.


ஆரம்பத்தில் மெட்ரோ ரயில்களுக்கு போதிய ஆதரவு இல்லாத நிலை காணப்பட்டது. இந்த நிலையில் இப்போது மெட்ரோ ரயில் இல்லாவிட்டால் சென்னையின் வாழ்க்கையே ஸ்தம்பித்துப் போய் விடும் என்ற அளவுக்கு அது வளர்ச்சி அடைந்து விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

Rain alert: நவம்பர் 26, 27, 28.. தமிழ்நாட்டில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்

news

Political Talk.. எம்ஜிஆர் ஜெயலலிதா எழுதிய வரலாற்றை.. வலுக்கட்டாயமாக அழிக்கிறதா அதிமுக?

news

மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார்.. இப்படி பேசுவார் என நினைச்சுக் கூட பார்க்கலை.. எஸ்.ஏ.சந்திரசேகர்

news

TVK.. மாவட்டச் செயலாளர்களாக யாரைப் போடலாம்.. தீவிரமாக களம் குதித்த விஜய்யின் தவெக!

news

AIADMK.. கள ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து மோதல்.. வெடிக்கும் தொண்டர்கள்.. திகைப்பில் தலைமை!

news

Special Story: சிங்கம் கழுகு கூட்டணியா.. சிலாகிக்கும் NTK.. சீமான் விளக்கம்.. ரஜினி சந்திப்பு ஏன்?

news

ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

news

Govt Holidays 2025: ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை.. எந்த மாதத்தில் அதிக லீவு?

அதிகம் பார்க்கும் செய்திகள்