வெளுத்து வாங்கும் கன மழை.. 3 மாவட்டங்களுக்கு விரைகிறது பேரிடர் மீட்புக் குழு

Dec 17, 2023,06:53 PM IST

நெல்லை : கனமழை எச்சரக்கை காரணமாக நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழு விரைந்துள்ளது.


வங்கக் கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றத்த தாழ்வுநிலை காரணமாக நெல்லை, கன்னியாக்குமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. 




இந்த மாவட்டங்களில் ஏற்கனவே கொட்டி தீர்த்து வரும் கனமழையால் குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை தொடர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கனமழை காரணமாக நெல்லை மாவட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருவதால் அணைகளில் இருந்து அதிக அளவிலான நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கனமழை ஒருபுறம், வெள்ளம் ஒரு புறம் என நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் பெரு அவதிக்கு ஆளாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை நெல்லை மாவட்டம் கூடங்குளம், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மிக அதிக அளவில் மழை அளவு பதிவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.




இதனால் நெல்லை, கன்னியாக்குமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் மற்றும் மழை நீரில் சிக்கி உள்ள மக்களை மீட்பதற்காக அரக்கோணத்தில் இருந்து தலா 25 பேர் கொண்ட 4 தேசிய பேரிடர் மீட்புக் குழுவை சேர்ந்த 100 வீரர்கள் புறப்பட்டு சென்றுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்