புழல் ஜெயிலில் குஷ்பு.. திடீர் ஆய்வுக்குப் பின் "சர்பிரைஸ் சபாஷ்"!

Jul 20, 2023,03:28 PM IST

சென்னை: தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக உள்ள நடிகையும், பாஜகவைச் சேர்ந்தவருமான குஷ்பு சென்னை புழல் மகளிர் சிறைக்குச் சென்று ஆய்வு நடத்தினார். அந்த ஆய்வுக்குப் பின்னர் சிறை மிகவும் சுத்தமாகவும், சரியாகவும் இருப்பதைக் கண்டு அதிகாரிகளைப் பாராட்டி தனது ஆச்சரியத்தையும் வெளிப்படுத்தினார்.


நடிகை குஷ்பு தற்போது தேசிய மகளிர்  ஆணைய உறுப்பினராக உள்ளார். அந்த அடிப்படையில் நேற்று சென்னை புழல் மகளிர் சிறைக்கு அவர் சென்று ஆய்வு நடத்தினார். இதுகுறித்து அவர் டிவீட் போட்டுள்ளார்.




அந்த டிவீட்டில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக புழல் சிறைக்கு நேற்று சென்றிருந்தேன். ஜெயிலருடன் நீண்ட நேரம் உரையாடினேன்.  சிறைக் கைதிகளுக்கு என்ன மாதிரியான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன, அவர்களுக்கு இன்னும் செய்யலாம், அவர்களது வாழ்க்கைத் தரத்தை எப்படி மேம்படுத்தலாம் என்பது கு��ித்து உரையாடினோம்.


சிறை வளாகம் மிகவும் சுத்தமாக இருந்தது, சரியாக இருந்தது என்னை ஆச்சரியப்படுத்தியது. கைதிகளை அங்கு நன்றாக பார்த்துக் கொள்கிறார்கள்.  அவர்களுக்கு பல்வேறு பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. சிறையிலிருந்து விடுதலை ஆன பிறகு அவர்கள் சொந்தக் காலில் நிற்க இது உதவும். அவர்களுக்கான நிதி ஆதாரத்தை அவர்களே ஏற்படுத்திக் கொள்ளவும் உதவும்.


இதை மேலும் எப்படி சிறப்பாக அமல்படுத்தலாம், மேற்கொள்ளலாம் என்பது குறித்து எனது கருத்துக்களையும் ஜெயிலரிடம் தெரிவித்தேன் என்று கூறியுள்ளார் குஷ்பு.




மணிப்பூர் குரூரத்திற்கு குஷ்பு கண்டனம்


முன்னதாக மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தி குரூரமாக நடத்தப்பட்டது குறித்து குஷ்பு கடும் கண்டனத்தைத்  தெரிவித்திருந்தார். 


இதுதொடர்பாக அவர் போட்டிருந்த டிவீட்டில்,  எந்தச் சூழ்நிலையாக இருந்தாலும் சரி, இதுபோன்ற கொடுமைகளுக்கு மரண தண்டனையைத் தவிர வேறு எதுவுமே பொருத்தமாக இருக்காது. இதில் ஈடுபட்ட அத்தனை பேருக்கும் அந்தத் தண்டனை கொடுக்கப்பட வேண்டும். இந்த கொடிய குற்றத்தில் ஈடுபட்ட அத்தனை ஆண்களும் மரண தண்டனைக்குள்ளாக்கப்பட வேண்டும். இதை வேடிக்கை பார்த்தவர்களும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். மதக் கலவரங்கள், குடும்ப சண்டைகள், தனிப்பட்ட மோதல்கள், பழிவாங்கல்கள், இப்படி எந்த பிரச்சினையாக இருந்தாலும் பெண்கள்தான் குறி வைக்கப்படுகிறார்கள். நமது சமுதாயத்தில் நமது ஆண்கள், எந்த அளவுக்கு கொடூரமாகவும், முதுகெலும்பில்லாதவர்களாகவும், கோழைகளாகவும் இருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது என்று குமுறியிருந்தார் குஷ்பு.

சமீபத்திய செய்திகள்

news

LPG Cylinder price hike: வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூபாய் 50 உயர்வு.. மக்கள் அதிர்ச்சி..!

news

சமையல் எரிவாயு விலை ரூ.50 உயர்த்தப்பட்டது ஏழை, நடுத்தர மக்கள் மீதான தாக்குதல்: டாக்டர் ராமதாஸ்

news

சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான வயது வரம்பை 33 ஆக உயர்த்த வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

தமிழக அரசியலில் தனிப்பெரும் தலைவராக சீமான் திகழ்கிறார்: பாஜக தலைவர் அண்ணாமலை புகழாரம்!

news

வங்கக்கடலில் உருவானது.. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் ஒரு நாள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!

news

இது ஏப்ரல் மாதமாகவே இருக்காது.. கூலான கோடையாக இருக்கும்.. அடுத்த 10 நாட்கள் மழை.. வெதர்மேன் அப்டேட்!

news

மன்னார் வளைகுடா பகுதியில்..புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்.. முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு

news

மாணவியர் விடுதி கட்டுவதற்கு பதிலாக தோழி விடுதி கட்டுவதா?: டாக்டர் ராமதாஸ் கேள்வி!

அதிகம் பார்க்கும் செய்திகள்