ஜாபர் சாதிக் பற்றிய திடுக்கிடும் தகவல்..! அம்பலப்படுத்திய தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி

Mar 09, 2024,08:09 PM IST

சென்னை: போதைப் பொருள் கடத்தலில் முக்கிய புள்ளியாக இருந்த ஜாபர் சாதிக் இன்று கைது செய்யப்பட்ட நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் மதம், இனம், மொழி, கட்சி ,கடந்து ஜாபர் சாதிக் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவின் துணை இயக்குனர் ஞானேஸ்வரர் பேட்டியளித்துள்ளார்.


டெல்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைலாஷ் பார்க் பகுதியில் சோதனை நடத்தி வந்தனர். அப்போது அங்கு போதைப் பொருள் தயாரிக்க மூலப்பொருளாக பயன்படும் சூடோ பெட்ரின் என்ற வேதிப்பொருளை கண்டறிந்தனர். இதன் மதிப்பு சுமார் 2000 கோடி ஆகும். இதனை அடுத்து இதில் சம்பந்தப்பட்ட மூவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது இதில்  ஜாபர் சாதிக் என்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் முக்கிய புள்ளியாக செயல்பட்டது தெரியவந்தது.மேலும் இந்த ரசாயன பொருட்களை ஆஸ்திரேலிய மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்துவதாகவும் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் இவரை கண்டுபிடிக்க தீவிர முனைப்புடன் செயல்பட்டு வந்தனர். 




நேற்று ஜாபர் சாதிக்  ஜெய்ப்பூரில் உள்ள ஹோட்டலில் தலைமறைவாக இருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது.இதனை அடுத்த  இன்று ஜாபர் சாதிக்கை  போலீசார் கைது செய்தனர். பின்னர் அங்கிருந்து உடனடியாக டெல்லிக்கு அழைத்துச் சென்று,இவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு துணை இயக்குனர் ஞானேஸ்வர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ராஜஸ்தானில் பதுங்கியிருந்த ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்து விசாரணை நடத்திய போது, இவர் போதைப்பொருள் கடத்தலில் கிடைத்த பணத்தை சினிமா, கட்டுமானம் போன்ற தொழிலில் முதலீடு செய்ததாக  வாக்குமூலம் அளித்துள்ளார்.


ஏற்கனவே இவர் மீது 2019-ல் மும்பை சுங்கத்துறையில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக வழக்கு உள்ளது. ஜாபர் சாதிக்கிற்கு பல்வேறு பெரும் புள்ளிகளுடன் தொடர்புள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 3,500 கிலோ சூடோபெட்ரைன் போதைப்பொருளை கடத்தியுள்ளார். உணவுப் பொருள் என்ற பெயரில் ஆஸ்திரேலியா, மலேசியா, நியூசிலாந்துக்கு போதைப் பொருளை கடத்தியுள்ளார்.மேலும் ஜாபர் சாதிக் அரசியல் கட்சிகளுக்கு நிதியுதவி அளித்தாரா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். மெத்தம் பெட்டமைன் தயாரிக்க பயன்படும் மூலப்பொருளான சூடோபெட்ரைனை கடத்தினால் 10 ஆண்டு வரை சிறை தண்டனை வழங்கப்படும்.குற்றம் நிரூபிக்கப்பட்டால் மதம், இனம், மொழி, கட்சி கடந்து ஜாபர் சாதிக் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்