அதிரடி ராக்காயி.. அசர வைக்கும் டைட்டில் டீசருடன்.. பிறந்த நாளைக் கொண்டாடிய நயன்தாரா!

Nov 18, 2024,03:15 PM IST

சென்னை: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் ராக்காயி படத்தின் டைட்டில் லுக் டீஸர் இன்று வெளியாகி வைரலாகி வருவதுடன் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


தமிழ் சினிமாவில் கடந்த 2005 ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா திரைப்படம் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை நயன்தாரா. அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்களிடம் ஸ்கோர் அடித்து விட்டார் என்றே சொல்லலாம். ஏனெனில் அவரின் குடும்பப்பங்கான கதாபாத்திரம் ஆண் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பெண்களின் மனதிலும் ஆணித்தரமாக பதிந்தது.




இதனைத் தொடர்ந்து காதல் நகைச்சுவை திரைப்படமான ராஜா ராணி, வித்தியாசமான கதாபாத்திரத்தில் நானும் ரவுடிதான், சந்திரமுகி, கஜினி, பில்லா, யாரடி நீ மோகினி, தனி ஒருவன், மூக்குத்தி அம்மன், விசுவாசம் உள்ளிட்ட பல படங்கள் அடுத்தடுத்த வெற்றி படமாக அமைந்தது. சிறந்த நடிகையாக வலம் வந்த நயன்தாராவுக்கு  ரசிகர்களும் ஆண்களுக்கு நிகரான லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற பட்டமும் கொடுத்து கௌரவிக்கப்பட்டது. 


இதற்கிடையே தெலுங்கில் சீதா தேவியாக, ராம ராஜ்ய திரைப்படத்தில் நடித்து அசத்தினார். இப்படம் தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழிலும் நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் அறம், மாயா, இமைக்கா நொடிகள், டோரா, அனாமிகா, போன்ற பெண்களை மையப்படுத்தும் கதைகளிலும் நடித்து மக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றார்.தனது நடிப்பை செம்மைப்படுத்தி தனக்கென்ற தனி ஸ்டைலில் கலக்கி வரும் நயன்தாரா நடிப்பை தாண்டி ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். 


கடந்த 2022 ஆம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பிறந்தநாள் இன்று. இவரது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்துள்ளார் நயன்தாரா. அதாவது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணம் தொடர்பான   Beyond the Fairy Tale என்ற ஆவணப்படம் இன்று  நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ளது . இதனை ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்று  கொண்டாடி வருகின்றனர்.




அதே சமயத்தில் ரசிகர்களுக்கு தனது பிறந்த நாள் பரிசாக நயன்தாரா நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட்டும் வெளியாகி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாகியுள்ளது.  நயன்தாரா நடிக்கும் அடுத்த படமான ராக்காயி படத்தின் டைட்டில் லுக் டீசரை படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. மலைவாழ் கிராமத்தில் வசிக்கும் வீரமான மங்கையர் போல கையில் அரிவாளுடன் நயன்தாரா இருக்கும் தோற்றத்தில் டீசர் வெளியானது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடிக்க உள்ள நடிகர் நடிகைகள் பற்றிய தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.


ட்ரம்ஸ்டிக் புரோடக்ஷன் தயாரிப்பில் லேடீஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் திரைப்படம் ராக்காயி. இப்படத்தை அறிமுக இயக்குனர் செந்தில் நல்லசாமி இயக்குகிறார். இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய பிரவீன் ஆண்டனி எடிட்டராக பணியாற்றுகிறார்.


அதிரடி ஆக்சன் டிராமாவாக உருவாக்கும் ராக்காயி படத்தில் நயன்தாரா இதுவரை பார்த்திராத அதிரடி ஆக்சன் தோற்றத்தில் அவதரிக்க உள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்