சென்னை: நயன்தாராவின் அன்னபூரணி படத்திற்கு யூ சான்றிதழ் நேற்று கிடைத்த நிலையில் இப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் படம் என்றாலே ரசிகர்களிடம் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அதுவும் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே உள்ளது. இப்படம் நம்ம நயன்தாராவின் 75வது படமாகும். அன்னபூரணி படத்தில் ரூ.10 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளி வருகின்றன. அதிக அளவிலான பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு கொண்டு வருவதில்தான் ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படங்களின் வெற்றி உள்ளது.
நல்ல தரம் கொண்ட திரைப்படங்கள் நகரங்கள், புறநகர்ப் பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் தொடர்ந்து அமோக வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த வரிசையில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த அன்னபூரணி திரைப்படம் சிபிஎஃப்சியின் 'யு' சான்றிதழைப் பெற்று, ஒட்டுமொத்த படக்குழுவினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சிறந்த தொழில்நுட்பத் தரத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை ஷங்கரிடம் உதவிஇயக்குனராக இருந்த நிலேஷ் கிருஷ்ணா இப்படத்தை இயக்க, ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் & டிரிடெண்ட் ஆர்ட்ஸ் ஆகியோர் தயாரித்துள்ளனர். "உணவு" என்ற தீம் கொண்ட இந்தப் படத்திற்கு லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் வசீகரமும் முக்கிய ஈர்ப்பாக அமைந்துள்ளது.
இப்படத்தில் ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார், குமாரி சஞ்சு, ரேணுகா, கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். தமன் எஸ் இசையமைத்திருக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார். ஜி துரைராஜ் (கலை), அருள் சக்தி முருகன் (வசனம்), பிரசாந்த் எஸ் (கூடுதல் திரைக்கதை), சஞ்சய் ராகவன் (கிரியேட்டிவ் தயாரிப்பாளர்), லிண்டா அலெக்சாண்டர் (நிர்வாகத் தயாரிப்பாளர்), வெங்கி (பப்ளிசிட்டி டிசைனர்) மற்றும் சுரேஷ் சந்திரா-ரேகா டி'ஒன் (மக்கள் தொடர்பு) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர்.
இப்படம் இன்று உலகம் முழுவதிலும் வெளியாகுகிறது. குடும்பமாக சென்று பார்த்து பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்க இருக்கிறது. சிபிஎஃப்சியின் 'யு' சான்றிதழுக்கு படக்குழு நன்றி தெரிவித்துள்ளது. உலகளவில் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்தப் படம், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் நடிப்புத் திறமையை மீண்டும் நிரூபிக்கும் வகையிலான கதைக்களத்துடன் உள்ளது என்பதில் சந்தேகமில்லை. இப்படம் எப்படிப்பட்ட படம் என்பது சற்று நேரத்தில் தெரிந்து விடும் என்பதில் ஐயம் இல்லை.
Rain alert: நவம்பர் 26, 27, 28.. தமிழ்நாட்டில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்
Political Talk.. எம்ஜிஆர் ஜெயலலிதா எழுதிய வரலாற்றை.. வலுக்கட்டாயமாக அழிக்கிறதா அதிமுக?
மாநாட்டில் விஜய் கலக்கிவிட்டார்.. இப்படி பேசுவார் என நினைச்சுக் கூட பார்க்கலை.. எஸ்.ஏ.சந்திரசேகர்
TVK.. மாவட்டச் செயலாளர்களாக யாரைப் போடலாம்.. தீவிரமாக களம் குதித்த விஜய்யின் தவெக!
AIADMK.. கள ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து மோதல்.. வெடிக்கும் தொண்டர்கள்.. திகைப்பில் தலைமை!
Special Story: சிங்கம் கழுகு கூட்டணியா.. சிலாகிக்கும் NTK.. சீமான் விளக்கம்.. ரஜினி சந்திப்பு ஏன்?
ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!
Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!
Govt Holidays 2025: ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை.. எந்த மாதத்தில் அதிக லீவு?
{{comments.comment}}