சென்னை: நடிகை சமந்தா திரைத்துரைக்கு வந்து இன்றுடன் 14 ஆண்டுகள் ஆகின்றன. இதையடுத்து "லேடி சூப்பர் ஸ்டார்" நயன்தாரா சமந்தாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திரைத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா. இவருக்கு வயது 36. தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர். இவர் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். இவரது திருமண வாழ்க்கை 2021ல் மனக்கசப்பு காரணமாக முறிந்து போனது.
சமந்தா கடந்த 2010ம் ஆண்டு முதன்முதலில் திரைத்துறையில் கால் பதித்தார். இவர் முதன் முதலில் யே மாயா சேசவே என்னும் தெலுங்கு படத்தில் மூலமாக திரை வாழ்க்கையைத் தொடங்கினார். இந்த படம் தான் தமிழில் விண்ணைத் தாண்டி வருவாயா என வெளிவந்தது.
அதன் பிறகு அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களில் நடிக்க ஆரம்பித்தார் சமந்தா. தமிழில், பானா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம், தீயா வேலை செய்யணும் குமாரு, அஞ்சான், கத்தி, 24, தெறி, மெர்சல், சீமராஜா, நான் ஈ, நடுநிசி நாய்கள், தங்க மகன், 10 எண்றதுக்குள்ள, காத்து வாக்குல ரெண்டு காதல் உட்பட தமிழ் படங்களில் நடித்தவர். தற்போது வரை பல்வேறு படங்களில் நடித்துள்ள நடிகை சமந்தாவுக்கு நீதானே எந்தன் என் பொன்வசந்தம் திரைப்படம் சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருதை பெற்று தந்துள்ளது. இது தவிர நந்தி விருது, விஜய் டிவி விருது ஆகியவற்றையும் பெற்றுள்ளார்.
சமீபத்தில் இவருக்கு தசை அழற்சி நோய் ஏற்பட்டு. மிகுந்த பாதிப்புக்குள்ளாகி நடிப்பிற்கே பிரேக் விட்டார். அந்த நோயில் இருந்து மெல்ல மெல்ல மீண்ட நிலையில் மீண்டும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சமந்தா திரைத்துறைக்கு வந்து இன்றுடன் 14 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு, சமந்தாவிற்கு நடிகை நயன்தாரா இணைய பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், சாம் 14 ஆண்டுகள் ஆனதற்கு வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார் நயன்தாரா. அதற்கு சமந்தா நன்றி என் அழகான நயன்தாரா என்று பதில் அளித்துள்ளார். 2022 ல் சமந்தா மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்படத்தக்கது. இவர் மட்டும் இன்றி சமந்தாவின் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Chennai Super Kings no more a champion team?.. தொடர் சொதப்பல் + தோல்விகளால்.. ரசிகர்கள் அதிர்ச்சி!
மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. ரசிகர்கள் கடும் அதிருப்தி!
தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை இலங்கை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி இலங்கையில் பேச்சு!
நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்
தமிழ்நாட்டில்.. நேற்று போலவே இன்றும் மழை தொடரும்.. வெதர்மேன் தகவல்!
தமிழக பாஜக தலைவர் நியமனம் எப்போது?.. 11 ஆம் தேதி அன்று தெரியும்!
எம்புரான் பட இயக்குனர்.. நடிகர் பிரித்விராஜுக்கு வருமான வரித்துறை அதிரடி நோட்டீஸ்
தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!
அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார்!
{{comments.comment}}