- கவிஞாயிறு இரா. கலைச்செல்வி
பிறரை சிரிக்கவை சிந்திக்கவை ஆனால்
பிறருக்கு சிரமத்தை வைக்காதே.
நம்மீது நமக்கு நம்பிக்கை இருக்கும்வரை
நம் வாழ்க்கை நம்வசமே .
நம் எண்ணங்கள் மின்காந்தசக்தி வாய்ந்தவை
நல்லதே நினைத்து பழகு.
நிராகரிக்கப்பட்ட இடத்தில் கோபம் காட்டாதே
சிரிப்பை காட்டு சிறந்தபதிலடி.
வலிகள் இல்லையெனில் வாழ்க்கை இல்லை
முயற்சி இல்லையெனில் வெற்றியில்லை.
வாழ்க்கை போராட்டம் தான் அதனை
இனிமையாக்குவதும் கடினமாக்குவதும் நாமே .
மனம் ஒரு தனி மனிதன் அதனை
அடக்கி ஆள்பவன்தான் மனிதன் .
முறையற்ற ஆசையை அடக்கு இல்லாவிடில் ,
அது உன்னையே ஆளத்தொடங்கிவிடும்.
அடுத்தவர் பேசும் போது அவர்களை
முழுவதும் பேச அனுமதியுங்கள்.
தன்னம்பிக்கை உன்னுள் இருந்தால் நிச்சயம்
உன்வாழ்வில் அனைத்தும் சாத்தியமாகும்.
தினமும் அன்றாட வேலையை பட்டியலிடுங்கள்
இரவுக்குள் செய்து முடியுங்கள்.
பட்டியலிட்ட வேலையை முடித்துப் பாருங்கள்
மனதிற்குள் எத்துணை மகிழ்ச்சி .
ஊழியரின் உழைப்பை பாராட்ட தயங்காதிர்கள்
அதுஅவர்களை மேலும் உழைக்கத்தூண்டும் .
எதற்கெடுத்தாலும் பிறறை குறை கூறாதீர்கள்
உங்கள் குறையை ஆராயுங்கள்.
குறை கூறுவதை சற்று தள்ளி போடுங்கள்
குறையே கூட நிவர்த்தி அடையலாம்.
கடமையை கடமைக்காக, ஒருபோதும் செய்யாதே
கடமையை அன்போடு செய் .
ஒருவர் சிறுஉதவி செய்யினும் நன்றிசொல்
மிகப்பெரிய உதவிகள் வந்தடையும் .
புகழ்வதை பலபேர் முன் பாராட்டுங்கள்
குறைகளை தனியாக சுட்டிக்காட்டுங்கள் .
பசி வந்த பின் சாப்பிடு
பசி தீரும்முன் எழுந்திரு .
சில சமயங்களில் சாதாரண விஷயங்கள்கூட,
சிலர் சொல்லும்போதுதான் புரியும்.
உங்களுக்காக வாழ்ந்த முதியோரை மதியுங்கள்
உங்களுக்காக தன்னை இழந்தவர்கள்.
உறவினை இழந்த பிறகு வருந்தாதே
இருக்கும் போதே அன்புகொள்.
உன் ஆழ்மனதினை அகழாய்வு செய்
கீழடியைப்போல் தடயங்கள் கிட்டும்.
உன் கனவினை ஆழ்மனதில் பதித்துவிடு
உரிய வழிகள் உடனே கிட்டும்.
உலகில் எதுவும் நிரந்தரமில்லாத நிலையில்
உன்துன்பம்மட்டும் எப்படி நிரந்தரமாகும்?
(எழுத்தாளர் பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். நிலாமுற்றம் உள்ளிட்ட பல நிகழ்வுகளிலும் அவர் பங்கெடுத்துள்ளார். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அதிக அளவில் எழுதி வருகிறார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Chennai Super Kings அணியில் Baby AB.. குர்ஜாப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்ட் ப்ரீவிஸ்!
அமித்ஷா அல்ல.. எந்த ஷா வந்தாலும்.. ஒரு கை பார்ப்போம்.. முதல்வர் மு க ஸ்டாலின் சவால்!
கூட்டணி அழைப்புக்கு நன்றி.. எங்கள் பயணம் எங்கள் கால்களை நம்பிதான்... கூட்டணி குறித்து சீமான் பதில்!
தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!
கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!
அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்
குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!
பூஜ்ஜிய நிழல் தினம்... பொதுமக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்!
குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு வழங்கும் திட்டம்... 9 மாவட்டங்களுக்கு அனுமதி!
{{comments.comment}}