இன்று நவராத்திரி 2ம் நாள் : அம்பிகையின் வடிவம், கோலம், நிறம், நைவேத்தியம் இது தான்

Oct 04, 2024,10:09 AM IST

சென்னை :  2024ம் ஆண்டிற்கான நவராத்திரி விழா அக்டோபர் 03ம் தேதி துவங்கி, 11ம் தேதி வரை உள்ளது. நவராத்திரி விழாவின் நிறைவு நாளான அக்டோபர் 11ம் தேதி அன்றும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வழிபாடும், அக்டோபர் 12ம் தேதி விஜயதசமி விழாவும் கொண்டாடப்பட உள்ளது. வட மாநிலங்களில் நவராத்திரி துர்கா பூஜை என்ற பெயரிலும், விஜயதசமியானது தசரா என்ற பெயரிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


வருடத்திற்கு நான்கு நவராத்திரிகள் வந்தாலும் புரட்டாசி மாதத்தில் மகாளய அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறையில் கொண்டாடப்படும் சாரதா நவராத்திரியே மிகவும் விமர்சையாக பெரும்பாலானவர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமை துவங்கி, தசமி வரையிலான நவராத்திரியின் ஒன்பது நாட்களும் வீடுகளிலும், கோவில்களிலும் கொலு வைத்து கொண்டாடுவது உண்டு. நவராத்திரியின் ஒன்பது நாட்களில் முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கு உரியதாகவும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமிக்கு உரியதாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கு உரியதாகவும் சொல்லப்படுகிறது.




இருந்தாலும் நவராத்திரியின் ஒன்பது நாட்களும் ஒவ்வொரு நாளும் அம்பிகையின் ஒவ்வொரு வடிவத்தை கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு நவராத்திரியின் இரண்டாம் நாள் அக்டோபர் 04ம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளுக்கு மற்றொரு சிறப்பு என்னவென்றால், இந்த ஆண்டு வரலட்சுமி நோம்பு மற்றும் ஆடிப் பெருக்கு அன்று விரதம் இருந்து தாலிச்சரடு மாற்றிக் கொள்ள முடியாமல் போன பெண்கள் இந்த நாளில் வரலட்சுமி நோன்பு கடைபிடித்து, தங்களின் தாலி பாக்கியம் நிலைக்க தாலிச்சரடி மாற்றிக் கொள்ளலாம். இந்த ஆண்டு நவராத்திரியில் அக்டோபர் 11ம் தேதி மற்றொரு வெள்ளிக்கிழமை வருகிறது. ஆனால், அன்று சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட உள்ளதால் அன்று நோன்பு வைப்பது பலருக்கும் முடியாத காரியமாக இருக்கும். அதனால் அக்டோர் 04ம் தேதி தாலிச்சரடு மாற்றிக் கொள்ளலாம்.


நவராத்திரி 2024 இரண்டாம் நாள் வழிபாடு : 


அம்பிகையின் பெயர் - ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி

கோலம் - கட்டம் வகை கோலம்

மலர் - முல்லை

இலை - மருவு

நைவேத்தியம் - புளி சாதம்

சுண்டல் - வேர்கடலை

பழம் - மாம்பழம்

நிறம் - மஞ்சள்


நவ துர்க்கை வழிபாட்டில் நவராத்திரியின் 2ம் நாளில் பிரம்மச்சாரினி மாதாவை வழிபட வேண்டும். இவள் ஆயிரம் வருடங்கள் கடும் தவம் இருந்து சிவ பெருமானை கணவனாக அடையும் வரம் உள்ளிட்ட பல வரங்களை பெற்றதாக புராணங்கள் சொல்கின்றன. இவள் ஆதி சக்தியாக கருதப்படுவதால், இவளை கிரியா சக்தியின் வடிவில் வழிபட வேண்டும். இவளுக்கு பல விதமான பழ வகைகள் படைத்து வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்