சிவகங்கை: தேசிய அஞ்சல் வாரத்தை முன்னிட்டு தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகப் பள்ளியில் தபால் பார்சல் சேவை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
தபால் அமைப்புகள் பல நூற்றாண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கடந்த காலகட்டத்தில் ஒருவருக்கு, ஒரு செய்தியை அனுப்ப வேண்டும் என்றால் தபால் சேவை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இதன் மூலம் எழுத்து திறன் எழுதும் பயிற்சி பொலிவடைந்தது. ஆனால் தற்போது தொழில்நுட்ப சாதனங்கள் அதிகரித்து வந்ததால் தபால் சேவையின் பயன் குறைந்துள்ளது. ஆனால் அஞ்சலகத்தின் மூலம் அனுப்பப்படும் பார்சல் சேவைகள் தற்போது வரை செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் அஞ்சல் சேவையின் முக்கியத்துவத்தை எடுத்து கூறும் பொருட்டு ஒவ்வொரு வருடமும் அக்டோபர் ஒன்பதாம் தேதி முதல் 15ஆம் தேதி வரை ஒரு வாரத்திற்கு தேசிய அஞ்சல் தினம் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வரிசையில் இன்று தொடங்கும் தேசிய அஞ்சல் தினம் அக்டோபர் 15ஆம் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது.
அந்த வரிசையில் தேசிய அஞ்சல் வாரத்தை முன்னிட்டு சேர்மன் மாணிக்கவாசகப் பள்ளி மாணவ மாணவிகள் தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமையில் அஞ்சலகத்திற்கு களப்பயணம் சென்றனர். இவர்களுடன் ஆசிரியர்கள் முத்து லெட்சுமி மற்றும் ஸ்ரீதர் உடன் இருந்தனர்.
அப்போது தேவகோட்டை அஞ்சல் துறை தலைமை தபால் அதிகாரி செல்வராஜ் மாணவர்களை வரவேற்று தபால் சேவைகளின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு எடுத்துக் கூறி பேசினார்.
மேலும் இது குறித்து அவர் கூறியதாவது,
அஞ்சல் மற்றும் பார்சல் என்பது வாடிக்கையாளர்களுக்கு நல்ல உதவியாக இருக்கும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பார்சல் சேவை மிக குறைந்த செலவில் அனுப்பலாம். அனைத்து தபால் பெட்டிகள் மின்னணு செயலாக்கத்திற்கு மாற்றப்பட்டு உள்ளதையும் விளக்கினார்.
வெளிநாட்டு பார்சல் அனுப்புவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. அந்தமானுக்கு அனுப்பவேண்டிய பார்சல் தொடர்பாக முழு விவரங்கள் வழங்கப்பட்டது. அஞ்சல் துறையின் வழியாக அனுப்பும் தபால்களுக்கு மட்டுமே பொறுப்பு உண்டு. மிகவும் குறைவான கட்டணத்தில் வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்புவது அஞ்சலகத்தில் மூலம் மட்டுமே இயலும் .அஞ்சலகத்தில் மூலமாக அனுப்பப்படும் பார்சல்கள் மிகக் குறைவான நாட்களில் வெளிநாடுகளை சென்று அடையும் என பேசினார்.
இதனை தொடர்ந்து மாணவர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு, பதில் கூறிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நவம்பர் 1ம் தேதி.. 11 மாவட்டங்களில் பரவலாக கன மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்!
Draft electoral Roll: தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய தொகுதி சோழிங்கநல்லூர்.. சிறிய தொகுதி கீழ் வேளூர்!
அதிமுகவை தவெக தலைவர் விஜய் விமர்சிக்காதது ஏன் தெரியுமா?.. எடப்பாடி பழனிசாமி பலே விளக்கம்!
பத்தவச்சுட்டியே பரட்டை.. விஜய் பேச்சால் சலசலப்பு.. கப்சிப்பாக்க அதை கையில் எடுக்குமா திமுக?
Deepavali Rush: சென்னையில் மெட்ரோ ரயில் சேவை.. நாளை நீட்டிப்பு.. இரவு 12 மணி வரை இயங்கும்!
தம்பி விஜய் கூட இருக்கிற ரசிகர்களில் பாதிப் பேர்.. எனக்குதான் ஓட்டுப் போடுவாங்க.. சீமான்
இனி இன்னும் கடுமையாக விமர்சிப்பார்கள்.. 2026ல் நமது இலக்கை அடைவோம்.. தவெகவினருக்கு விஜய் அழைப்பு!
Deepavali: தமிழ்நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு.. நாளை அரை நாள் விடுமுறை அறிவிப்பு!
ரூ. 98 கோடி திட்டங்களை தொடங்கி வைத்து.. ரூ. 426 கோடி திட்டங்களைத் திறந்து வைத்த.. முதல்வர் ஸ்டாலின்
{{comments.comment}}