சென்னை: தேசிய பத்திரிகையாளர்கள் தினமான இன்று, உண்மையையும் பொறுப்புணர்வையும் நிலைநிறுத்தும் ஊடகவியலாளர்களின் இடைவிடாத முயற்சிகளுக்கு நாங்கள் தலைவணங்குகிறோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 16ம் தேதியன்று நாடு முழுவதும் பத்திரிகையாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருப்பவர்கள் பத்திரிகையாளர்கள். பத்திரிகையாளர்களை கௌரவிக்கும் விதமாக ஜனநாயகத்தை கட்டி காப்பதில் முக்கிய பங்காற்றும் ஊடகம் மற்றும் தொலைக்காட்சியின் பணியையும் சேவையையும் பாராட்டும் வகையில் தேசிய பத்திரிக்கையாளர் தினம் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி நாடு முழுவதும் உள்ள பத்திரிகையாளர்களுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பத்திரிகையாளர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
இந்த தேசிய பத்திரிக்கை தினத்தில் உண்மையை நிலை நிறுத்த அயராது பாடுபடும் ஊடகவியலாளர்களுக்கு மரியாதை செலுத்துகிறோம். உண்மையையும் பொறுப்புணர்வையும் நிலைநிறுத்தும் ஊடகவியலாளர்களின் இடைவிடாத முயற்சிகளை நாங்கள் மதிக்கிறோம். சகிப்புத்தன்மைக்கு மத்தியில், பத்திரிக்கையாளர்களின் தைரியமே ஜனநாயகத்தின் கடைசி பாதுகாப்பு அரனாக உள்ளது. நமது ஜனநாயகத்தை பாதுகாக்கும் குரல்களைப் பாதுகாப்பதில் உறுதியாக நிற்போம் என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Nayanthara: வாழு...வாழ விடு.. தனுஷ் வீடியோவை வைத்தே அவருக்கு பதிலடி கொடுத்த விக்னேஷ் சிவன்!
தனுஷ் தனிப்பட்ட வெறுப்பால் என்னை பழிவாங்குகிறார் ..நயன்தாரா பரபரப்பு குற்றச்சாட்டு!
Weather Forecast: தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு.. நாளை 3 மாவட்டங்கள்!
Mike Tyson vs Jake Paul.. 8 சுற்றுகள் நடந்த அதிரடி மோதலில்.. கோட் மைக் டைசனை வீழ்த்திய ஜேக் பால்
ஊடகவியலாளர்களின் இடைவிடாத முயற்சிகளுக்கு.. தலைவணங்குகிறோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
அன்பார்ந்த வாக்காளர்களே.. பெயர்களைச் சேர்க்க திருத்த மாற்ற.. இன்றும் நாளையும் சிறப்பு முகாம்!
Gold rate .. தங்கம் விலை.. நேற்று உயர்ந்து இன்று குறைந்தது... சவரன் எவ்வளவு தெரியுமா?
Lunch box recipe: வாங்க வாங்க .. சுரைக்காய் கெட்டி பருப்பு (பப்பு).. சாதம் சாப்பிடலாமா!
வந்தே பாரத் ரயில் சாம்பாரில் வண்டு.. நெல்லை டூ சென்னை பயணத்தின்போது பயணிகள் அதிர்ச்சி!
{{comments.comment}}