மறக்க முடியுமா.. 2001 நாடாளுமன்ற தீவிரவாத தாக்குதல் தினம்.. தலைவர்கள் நினைவஞ்சலி

Dec 13, 2023,11:13 AM IST

டெல்லி: 2001ம் ஆண்டு நாடாளுமன்ற வளாகத்திற்குள் புகுந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.


இந்தியர்கள் மறக்க முடியாத கருப்பு தினம் அது. அதுவரை எங்கெங்கோ தாக்குதல் நடத்தி வந்த தீவிரவாதிகள். நாடாளுமன்றத்தையே தொட்ட கொடும் தினம். 2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி நாடாளுமன்ற வளாகத்திற்குள் ஐந்து ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள் புகுந்தனர்.  டெல்லி காவல்துறையைச் சேர்ந்த 6 போலீஸார், 2 நாடாளுமன்ற பாதுகாப்புப் பிரிவு காவலர்கள், ஒரு தோட்டக்காரர் ஆகியோரை சுட்டுக் கொன்று விட்டு நாடாளுமன்றத்திற்குள் புக முயன்றனர். அவர்கள் ஐந்து பேரையும் ராணுவம் சுட்டுக் கொன்றது.


இந்த அதிர்ச்சிகரமான தாக்குதலில் ஈடுபட்டது லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் என்று பின்னர் தெரிய வந்தது. 




அப்போது பிரதமராக இருந்தவர் அடல் பிகாரி வாஜ்பாய், துணைப் பிரதமராக எல்.கே. அத்வானி இருந்தார்.  தீவிரவாதிகள் தாங்கள் வந்த காரை, குடியரசுத் துணைத் தலைவர் கிருஷ்ணகாந்த் கார் மீது மோதி நிறுத்தி விட்டுத் தாக்குதலில் குதித்தனர். 


தீவிரவாதிகளை முதலில் பார்த்து குரல் கொடுத்து காவலர்களை உஷார்படுத்தியவர் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் கமலேஷ் குமாரி என்ற பெண் காவலர்தான். இதையடுத்து அவரை முதலில் சுட்டுக் கொன்றனர் தீவிரவாதிகள்.  தீவிரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன்தான் ஊடுறுவியிருந்தனர். பாதுகாவலர்கள் சுட்டதில் ஒரு தீவிரவாதி உடலில் கட்டியிருந்த குண்டு வெடித்து அவன் சிதறினான்.


இந்த அதி பயங்கரவாத சம்பவத்தில் அமைச்சர்கள், எம்பிக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. 9 பேர் பலியானதுடன், 17 பேர் காயமடைந்தனர். 


இந்த சம்பவத்தின் நினைவு நாள் இன்று நாடாளுமன்றத்தில் அனுசரிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி உயிரிழந்த தியாகிகள் 9 பேரின் படங்களுக்கும் மலர் அஞ்சலி செலுத்தினார். எம்.பிக்கள், அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் புகழஞ்சலி செலுத்தினர்.


இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள டிவீட்டில், 2001ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தாக்குதலில் மிகவும் தீரத்துடன் போராடி தங்களது இன்னுயிரை தியாகம் செய்த தியாகிகளை நாம் நினைவு கூர்ந்துள்ளோம்.  அவர்களது வீரமும், தியாகமும் நமது நாட்டு மக்களின் நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

சிங்கம்-கழுகு கூட்டணியா?.. சிலாகிக்கும் நா.த.க.. சீமான் சொன்ன பதில்.. ரஜினியுடன் சந்திப்பு ஏன்?

news

ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!

news

Drumsticks price.. என்னடா இது.. முருங்கைக்கு வந்த கிராக்கி.. விர் விலை உயர்வு.. இல்லத்தரசிகள் கவலை!

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

news

நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்