புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமியின் மகள் விஜயக்குமாரியின் செல்போன் காணாமல் போன நிலையில் அரை மணி நேரத்திலேயே அதை புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸார் கண்டுபிடித்து மீட்டது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
புதுச்சேரியைச் சேர்ந்தவர் டாக்டர் விஜயக்குமாரி. இவர் முன்னாள் முதல்வர் நாராயணசாமியின் மகள் ஆவார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று தலைநகர் டெல்லியில் உள்ள தல்கோத்ரா கார்டன் உள் விளையாட்டு அரங்கில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மகளிர் பொறுப்பாளர்கள் மாநாட்டில் விஜயகுமாரி கலந்து கொண்டார்.
இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட அந்த மாநாட்டில் அவரது செல்போன் காணாமல் போய் விட்டது. இதனால் பதறிப் போன அவர் உடனடியாக, புதுச்சேரி சமூக பேரமைப்பின் தலைவர் டாக்டர் இளங்கோவனைத் தொடர்பு கொண்டு தெரிவித்தார். இளங்கோவன் உடனடியாக சைபர் கிரைம் ஆய்வாளர் கீர்த்தியைத் தொடர்பு கொண்டு விவரத்தைச் சொன்னார்.
உடனடியாக களத்தில்குதித்த புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் டாக்டர் விஜயகுமாரியின் செல்போன் எங்கே இருக்கின்றது என்பதை டிராக் செய்து அது இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து உள் விளையாட்டு அரங்கில் காவலுக்கு இருந்த காவலர்களுக்குத் தெரிவித்தனர். அவர்களது உதவியுடன் செல்போன் மீட்கப்பட்டு விட்டது. இதற்கு மொத்தம் எடுத்துக் கொண்ட நேரம் ஜஸ்ட் 30 நிமிடம்தான்.
விஜயகாந்த் படத்தில்தான் இப்படியெல்லாம் காட்சிகள் வரும் நாம் பார்த்து ரசித்திருக்கிறோம். அதே பாணியில் நிஜமாகவே ஒரு சம்பவம் நடந்திருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. காணாமல் போன போன் உடனடியாக மீட்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்த டாக்டர் விஜயகுமாரி மற்றும் புதுச்சேரி சமூக செயற்பாட்டாளர்களின் கூட்டமைப்பு சேர்ந்த டாக்டர் சசிகுமார், இராணுவ வீரர், மற்றும் தலைவர் இளங்கோவன், ராணி , பாக்ஸ்சந்து ஜெயின், ராஜி, வெற்றிச்செல்வன், கலைமாமணி சிலம்பம் ஜோதி மற்றும் டாக்டர் விஜயகுமாரி, கலியபெருமாள் மற்றும் சிவராஜ் ஆகியோர் சைபர் கிரைம் ஆய்வாளர்கள் கார்த்திகேயன், கீர்த்தி மற்றும் காவலர் மணிமொழி ஆகியோரை நேரில் சென்று பாராட்டி நன்றி தெரிவித்தனர். அனைவரையும் பாராட்டி பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த சம்பவம் புதுச்சேசரி மக்களின் வரவேற்பையும் கூட பெற்றுள்ளது.
{{comments.comment}}