"சும்மா கதறாதீங்க.. மன்மோகன் சிங்கே சொல்லிருக்காரே".. திமுகவுக்கு பாஜக பதிலடி!

Apr 08, 2023,09:22 AM IST

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் கூடன்குளம், ஸ்டெர்லைட் போராட்டம் குறித்துக் கூறியதற்காக திமுக கூட்டணிக் கட்சிகள் குய்யோ முறையோ என்று கதறிக் கொண்டிருக்கின்றன. இதுகுறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதை அவர்கள் வசதியாக மறந்து விட்டனர் என்று கூறியுள்ளார் தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி.



இதுதொடர்பாக நாராணன் திருப்பதி போட்டுள்ள ட்வீட்:

தமிழக ஆளுநர் பேசுகையில் கூடன்குளம் மற்றும் ஸ்டெர்லைட் போராட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட நிதி மக்களை தூண்ட பயன்பட்டது என்று  பேசியதற்காக தி மு க வினரும், காங்கிரஸ் கட்சியினரும் 'குய்யோ முறையோ' என்று கதறி கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் ஆளுநர்  ஸ்டெர்லைட் போராட்டத்தை கொச்சைப்படுத்தி விட்டார் என்று குறிப்பிடுகிறார்களேயன்றி கூடன்குளம் குறித்து அவர் பேசியதை மறைத்து விட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஆளுநர் பேசியது தவறு என்று கண்டிக்கிறார்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும், மக்களவை உறுப்பினர் கனிமொழி   அவர்களும். திடீர் தமிழ் பாசம் வந்து துடிக்கின்றது தமிழக காங்கிரஸ்.

பிப்ரவரி 24, 2012 அன்று அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள், "இந்தியாவின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் கூடன்குளத்தில் போராட்டம் செய்பவர்களை அமெரிக்க என் ஜி ஓ க்கள் நிதி அளித்து தூண்டி விடுகிறார்கள்" என்று  கூறியதை மறந்து விட்டு இன்று நீலிக்கண்ணீர் வடிப்பது கடும் கண்டனத்திற்குரியது. 
அதே போல் தி மு க தலைவர் கருணாநிதி அவர்களும், பிப்ரவரி, 29, 2012 அன்று கூடன்குளம் போராட்டத்திற்கு அமெரிக்க தொண்டு நிறுவனங்கள் தான் காரணம் என்று கூறியதையும், அ தி மு க அரசு போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்று கூறியதையும்  மு.க.ஸ்டாலின் அவர்களால் மறுக்க முடியுமா?

அப்படியென்றால், கூடங்குளத்தில் போராடியவர்கள் தேசத்துரோகிகள் என்று சொல்கிறதா தி மு க? அமெரிக்க நிதியினால் தூண்டப்பட்டதால் தான் போராட்டம் நடைபெற்றது என்று ஏற்றுக்கொள்கிறாரா மு.க.ஸ்டாலின் அவர்கள்? 

எதிர்க்கட்சியாக இருந்த���ல் போராட்டக்காரர்கள் தேச பக்தர்கள் என்றும் ஆளும்கட்சியாக இருந்தால் போராட்டக்காரர்கள் தேச விரோதிகள் என்றும் முத்திரை குத்துவது மலிவான அரசியல் மட்டுமல்ல ஆபத்தான அரசியலும் கூட. மன்மோகன் சிங் கூறினால் சரி, ஆர்.என்.ரவி கூறினால் தவறா? 

எந்த ஆதாரத்தை கொண்டு அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் கூடன்குளம் போராட்டத்தை தூண்ட வெளிநாட்டு நிதி தான் பயன்பட்டது என்று கூறினார் என்பதை அன்று மத்திய அமைச்சரவையில் இருந்த 
திமுக வின்  தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். 

சமீபத்திய செய்திகள்

news

ஏழு கொண்டலவாடா.. திருப்பதி லட்டு பிரசாதத்தில் கலப்படம்.. தடுக்க பவன் கல்யாண் தரும் ஐடியா!

news

வந்தாச்சு அறிவிப்பு.. விக்கிரவாண்டியில் அக். 27ல் முதல் மாநில மாநாடு.. புதிய பாதை அமைப்போம்.. விஜய்

news

செப்டம்பர் 20 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

மீன ராசிக்காரர்களே.. வேகத்தை குறைத்து விவேகமாக செயல்பட வேண்டிய காலம்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

அதிகம் பார்க்கும் செய்திகள்