நாகப்பட்டனம்: நாகப்பட்டினத்திலிருந்து இலங்கையின் காங்கேசன் துறைக்கு கப்பல் போக்குவரத்து இன்று முதல் தொடங்குகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி நாகை டூ இலங்கை காங்கேசன் துறை வரை கப்பல் போக்குவரத்து சேவையை பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்தார். மழை, கடல் சீற்றம், சூறாவளி காற்று, உள்ளிட்ட காரணங்களால் பலமுறை இந்தக் கப்பல் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில் நாகை டூ இலங்கை காங்கேசன் துறைக்கு இன்று முதல் கப்பல் சேவை தொடங்கப்பட உள்ளது. இந்த கப்பலுக்கு சிவகங்கை என பெயரிடப்பட்டுள்ளது. இந்தக் கப்பல் தினமும் காலை 8 மணிக்கு நாகையில் இருந்து புறப்பட்டு 4 மணி நேரத்தில் இலங்கை காங்கேசன் துறையை சென்றடையும் என்றும், மறு மார்க்கமாக இலங்கையில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும் இந்த கப்பல் மாலை 6:00 மணிக்கு நாகையை வந்தடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று தொடங்கப்பட இந்த கப்பல் சேவை இன்று மட்டும் நாகை துறைமுகத்தில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு மதியம் 2 மணி மணிக்கு இலங்கை காங்கேசன் துறையை சென்றடைகிறது. மறு மார்க்கமாக நாளை மறுநாள் இலங்கையில் இருந்து புறப்பட்டு நாகையை வந்தடையும்.
இந்தக் கப்பலில் பயணம் செய்வதற்கு 133 இருக்கைகள் கொண்ட சாதாரண வகுப்பில் பயண கட்டணம் ஒரு நபருக்கு ரூபாய் 5000 ஆகவும், 27 இருக்கைகள் கொண்ட ப்ரீமியம் வகுப்பில் ஒரு நபருக்கு ரூபாய் 7500 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கப்பல் முழுவதும் குளிர்சாதன வசதி மற்றும் தொலைக்காட்சி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சாம்பார் சாதம், தயிர் சாதம், தொடங்கி நூடுல்ஸ் போன்ற உணவுகளும் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் பயணம் செய்ய பயணிகள் மட்டுமல்லாமல் முதலீட்டாளர்களும் மிகுந்த வரவேற்பு அளித்து வருகின்றனர்.
இந்தக் கப்பல் போக்குவரத்து இன்று தொடங்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் பயணிகள் இலங்கை செல்வதற்கு மிகுந்த ஆர்வத்துடன் நாகை துறைமுகத்தில் அதிகளவு குவிந்துள்ளனர். இந்த சொகுசு கப்பலில் பல்வேறு சலுகைகள் இடம்பெற்றிருப்பதை காணவே பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
LPG Cylinder price hike: வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூபாய் 50 உயர்வு.. மக்கள் அதிர்ச்சி..!
சமையல் எரிவாயு விலை ரூ.50 உயர்த்தப்பட்டது ஏழை, நடுத்தர மக்கள் மீதான தாக்குதல்: டாக்டர் ராமதாஸ்
சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான வயது வரம்பை 33 ஆக உயர்த்த வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
தமிழக அரசியலில் தனிப்பெரும் தலைவராக சீமான் திகழ்கிறார்: பாஜக தலைவர் அண்ணாமலை புகழாரம்!
வங்கக்கடலில் உருவானது.. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!
சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் ஒரு நாள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!
இது ஏப்ரல் மாதமாகவே இருக்காது.. கூலான கோடையாக இருக்கும்.. அடுத்த 10 நாட்கள் மழை.. வெதர்மேன் அப்டேட்!
மன்னார் வளைகுடா பகுதியில்..புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்.. முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு
மாணவியர் விடுதி கட்டுவதற்கு பதிலாக தோழி விடுதி கட்டுவதா?: டாக்டர் ராமதாஸ் கேள்வி!
{{comments.comment}}