மீண்டும் தள்ளி வைப்பு.. நாகை - இலங்கை இடையே மே 19ம் தேதி கப்பல் போக்குவரத்து தொடங்கும்!

May 16, 2024,06:00 PM IST

நாகப்பட்டனம்: நாகப்பட்டனம்- இலங்கை காங்கேசன்துறை இடையேயான கப்பல் போக்குவரத்து நாளை தொடங்க இருந்த நிலையில், தற்பொழுது கனமழை பெய்து வருவதால் இந்த கப்பல்  போக்குவரத்து மே 19ம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


நாகப்பட்டனம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த கப்பலில் பயணம் செய்ய பயண கட்டணமாக ரூ.6,500 நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த கட்டணத்துடன் 18 சதவீதம் ஜிஎஸ்டி சேர்த்து ரூ.7,670 வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.  இயற்கை சீற்றம் காரணமாக அக்டோபர் 20ம் தேதி கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 




இந்த நிலையில் மே 17ம் தேதி முதல் இது மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக பலர் டிக்கெட் முன்பதிவும் செய்திருந்தனர். இந்நிலையில், நாளை தொடங்க இருந்த கப்பல் போக்குவரத்து கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கப்பல் போக்குவரத்திற்கு தாமதம் ஏற்பட்டதால் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளிடம் தனியார் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.


இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தவிர்க்க முடியாத சில சட்ட ரீதியான அனுமதிகள் காரணமாகவும், தாமதமான கப்பலின் வருகையினாலும் எமது திட்டமிட்ட நாகப்பட்டனம் -காங்கேசன் துறைமுகம் பயணிகள் கப்பல் சேவையினை இயக்க முடியவில்லை. இந்த சேவையினை 19-5-2024 இல் இருந்து இயக்குவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். இதுவரை பதிவு செய்த பயணிகள் 19-5-2024 அன்று அல்லது அதற்குப் பின்னர் அவர்கள் விரும்பிய தேதிகளில் பயணிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்.. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ரிப்பன் மாளிகையை சுற்றிப் பார்க்க அரிய வாய்ப்பு

news

2028 அதிபர் தேர்தலுக்குத் தயாராகப் போகிறாரா கமலா ஹாரிஸ்.. அடுத்த திட்டம் என்ன?

news

நவ. 14, 15 கன மழை எச்சரிக்கை.. சென்னையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்.. மேயர்பிரியா அப்டேட்!

news

ப வரிசைப் பட நாயகன்.. தமிழ்த் திரையுலகின் முத்திரை இயக்குநர்.. பீம்சிங் நூற்றாண்டு விழா.. நாளை!

news

உங்களுக்காக நடனமாடுகிறோம்.. எங்களுக்காக இதைச் செய்யுங்களேன்.. மேடை நடனக் கலைஞர்கள் கோரிக்கை!

news

மீண்டும் இ பாஸ் கட்டாயம்.. கொடைக்கானல், ஊட்டியில் வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்

news

TNPSC குரூப் 2 தேர்வு எழுதியவர்களா நீங்கள்.. சூப்பரான குட் நியூஸ் சொன்ன தேர்வாணையம்..!

news

Weather Report: தமிழ்நாட்டில்.. 6 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு .. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

news

விஜய் ஆர்கானிக் மாஸ் என்றால்... விசிக என்ன இன்ஆர்கானிக் மாஸா?.. விசிக தலைவர் திருமாவளவன்

அதிகம் பார்க்கும் செய்திகள்