சென்னை: நாம் தமிழர் கட்சி, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இன்று முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தனர்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் தந்தை பெரியார் குறித்து அவதூறு கருத்துக்களை பேசியதற்கு பல்வேறு தரப்பினரும் கடுமையாக கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக பெரியாரின் கொள்கையை திராவிட மாடல் கட்சியின் கொள்கையாக பின்பற்றி வரும் நிலையில் திமுக சார்பில் திக, திவிக, போன்ற பெரியார் அமைப்பினர்கள் பலரும் சீமானின் பெரியார் குறித்த அநாகரிகமான பேச்சிற்கு கடுமையாக எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதற்காக ஆதாரம் கேட்டு சீமானின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இருப்பினும் சீமான் தொடர்ந்து பெரியார் குறித்து அவதூறு கருத்துக்களை பேசிக்கொண்டே இருப்பதால் திமுகவினர் தங்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் 60க்கும் மேற்பட்ட வழக்குகள் சீமான் மீது போடப்பட்டுள்ளன.
இதற்கிடையே சீமான் பெரியார் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பி அநாகரிக முறையில் நடந்து கொள்வதாகவும், எந்த ஒரு செயலிலும் தன்னிச்சையாக ஈடுபடுவதாகவும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சிலர் குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னிச்சையாக செயல்படுவதாக சுட்டிக்காட்டி, அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள் தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் தலைமையில் இன்று திமுகவில் இணைந்தனர்.
அதேபோல் பாமக உள்ளிட்ட மற்ற கட்சியினரும் திமுகவில் இன்று இணைந்தனர். கிட்டத்தட்ட 3000 மாற்றுக் கட்சியினர் இன்று திமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்வு சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
திருப்பரங்குன்றம் விவகாரம்.. முதல்வர் மென்மையாக இருக்கக் கூடாது.. செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
தினம் ஒரு கவிதை.. கல்லுப் பிள்ளையார்
படகில் சென்று.. திரிவேணி சங்கமத்தில்.. 3 முறை புனித நீராடிய பிரதமர் நரேந்திர மோடி
அஜீத் ரசிகர்களே ரெடியா.. விடாமுயற்சி நாளை ரிலீஸ்.. சிறப்புக் காட்சிக்கு அரசு அனுமதி
144 தடை உத்தரவு வாபஸ்.. திருப்பரங்குன்றம் மலை கோவில், தர்காவுக்குச் செல்ல போலீஸ் அனுமதி!
தொடர் உச்சத்தில் தங்கம் விலை... சவரன் 63,000த்தை கடந்து புதிய உச்சம்!
சாம்சங் நிறுவனத்தில் மீண்டும் சர்ச்சை,3 தொழிலாளர்கள் சஸ்பெண்ட்..தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்
ஈரோடு கிழக்கு.. படு விறுவிறுப்பாக நடைபெறும் இடைத் தேர்தல் வாக்குப் பதிவு.. மக்களிடையே ஆர்வம்
ட்ரெய்லர் மட்டுமே பார்த்துவிட்டு.. இதுதான் என யூகிக்க வேண்டாம்.. விடாமுயற்சி நடிகை.. ஓபன் டாக்..!
{{comments.comment}}