இதோ இவர்கள்தான் உங்கள் வேட்பாளர்கள்.. நா.த.க.வின் 40 பேரையும் அதிரடியாக அறிமுகம் செய்த சீமான்

Mar 23, 2024,09:11 PM IST
சென்னை: நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாட்டில் உள்ள 39 லோக்சபா தொகுதிகள், புதுச்சேரி மக்களவைத் தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டசபை இடைத் தேர்தல் வேட்பாளர்களை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று அறிமுகம் செய்து வைத்தார்.

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த வேட்பாளர்கள் என்றால் அது நாம் தமிழர் கட்சிதான். திமுக, அதிமுக, பாஜகவுக்கு அடுத்து இப்போது லைம்லைட்டில் இருப்பது நாம் தமிழர் கட்சிதான். குறிப்பாக சீமான் பிரச்சாரத்தில் பேசப் போவது வழக்கம் போல பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

புதிய சின்னத்துடன் சீமான் தனது கட்சியினருடன் இந்த முறை களம் காணுகிறார். சின்னம் பறி போன சோகம் ஒரு பக்கம் இருந்தாலும் கூட வழக்கமான தனது கெத்தை விடவில்லை சீமான். இன்றைய வேட்பாளர் அறிமுகக் கூட்டத்திலும் அதைக் காணமுடிந்தது. சென்னையில், சீமான் ஸ்டைலில் நடந்த நாம் தமிழர் கட்சியின் கூட்டத்தில் 40 வேட்பாளர்களும், விளவங்கோடு இடைத் தேர்தல் வேட்பாளரையும் அறிவித்து அறிமுகம் செய்து வைத்தார் சீமான்.

விளவங்கோடு இடைத் தேர்தல் வேட்பாளர்:



விளவங்கோடு சட்டசபைத் தொகுதிக்கு நடைபெறும் இடைத் தேர்தலில் ஆசிரியை ஜெமினி போட்டியிடுகிறார். இவர் சமீபத்தில் குமரி மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட சேவியர் குமாரின் மனைவி ஆவார். பள்ளிக்கூட ஆசிரியையாக இருக்கும் ஜெமினியை விளவங்கோட்டில் நிறுத்தியுள்ளார் சீமான்.

தமிழ்நாடு லோக்சபா தொகுதி வேட்பாளர்கள்:

தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதி வேட்பாளர்களும் இக்கூட்டத்தில் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டனர். தொகுதிகளும், அதன் வேட்பாளர்களும் வருமாறு:

திருவள்ளூர் (தனி) - ஜெகதீஷ் சந்தர்.
வட சென்னை - டாக்டர் அமுதினி
தென் சென்னை - சு. தமிழச்செல்வி
மத்திய சென்னை - முனைவர் கார்த்திகேயன்
ஸ்ரீபெரும்புதூர் - டாக்டர் ரவிச்சந்திரன்
காஞ்சிபுரம் (தனி) - சந்தோஷ்குமார்
அரக்கோணம் - அப்சியா நஸ்ரின்
வேலூர் - மகேஷ் ஆனந்த்
தர்மபுரி - கா. அபிநயா

கிருஷ்ணகிரியில் வீரப்பன் மகள் வித்யா



கிருஷ்ணகிரி - வித்யா வீரப்பன்
திருவண்ணாமலை - டாக்டர் ரமேஷ் பாபு
ஆரணி - டாக்டர் பாக்கியலட்சுமி
விழுப்புரம் (தனி) - இயக்குநர் மு.களஞ்சியம்
கள்ளக்குறிச்சி - இயக்குநர் ஜெகதீசன்.
சேலம் - டாக்டர் மனோஜ் குமார்
நாமக்கல் - கனிமொழி
ஈரோடு - டாக்டர் கார்மேகன்
திருப்பூர் - சீதாலட்சுமி
நீலகிரி (தனி) - ஜெயக்குமார்
கோயம்புத்தூர் - கலாமணி ஜெகநாதன்
பொள்ளாச்சி - டாக்டர் சுரேஷ் குமார்
திண்டுக்கல் - கயிலை ராஜன் துரைராஜன்
கரூர் - டாக்டர் கருப்பையா
திருச்சி - ஜல்லிக்கட்டு ராஜேஷ்
பெரம்பலூர் - தேன்மொழி 
கடலூர் - மணிவாசகன்
சிதம்பரம் (தனி) - இரா. ஜான்சி ராணி

மயிலாடுதுறையில் காளியம்மாள்



மயிலாடுதுறை - காளியம்மாள்
நாகப்பட்டனம் (தனி) - மு.கார்த்திகா
தஞ்சாவூர் - ஹூமாயூன் கபீர்
சிவகங்கை - எழிலரசி
மதுரை - மோ. சத்யா தேவி
தேனி - டாக்டர் மதன் ஜெயபால்
விருதுநகர் - டாக்டர் கெளசிக்
ராமநாதபுரம் - டாக்டர் சந்திரபிரபா ஜெயபால்
தூத்துக்குடி - டாக்டர் ரொவீனா ரூத் ஜேன்
தென்காசி (தனி) - இசை மதிவாணன்
திருநெல்வேலி - பா. சத்யா
கன்னியாகுமரி - மரிய ஜெனிபர்
புதுச்சேரி - டாக்டர் ரா. மேனகா




இந்தக் கூட்டத்தில் உணர்ச்சி பொங்கப் பேசிய சீமான் மார்ச் 26ம் தேதி தனது கட்சியின் சின்னத்தை அறிமுகம் செய்து வைக்கவுள்ளார். அதைத் தொடர்ந்து மார்ச் 27ம் தேதி முதல் அவர் சூறாவளி சுற்றுப் பயணத்தைத் தொடங்கி பிரச்சாரத்தில் கலந்து கொள்ளவுள்ளார்.

முன்னதாக இன்றைய நிகழ்ச்சியில் சீமான் பேசும்போது, மக்கள் வாக்களிக்க வரும்போது சின்னத்தைத் தேட மாட்டார்கள். என்னைத்தான் தேடுவார்கள். சின்னத்தை வைத்து வாக்களிக்கும் முறையை ஒழியுங்கள் என்று ஆவேசமாக பேசினார். இதுவரை நடந்த தேர்தல்களில் விவசாயி சின்னத்தைத்தான் நாம் தமிழர் கட்சி பயன்படுத்தி வந்தது. தற்போது அந்த சின்னத்தை வேறு கட்சிக்குக் கொடுத்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்