"என் அருமை தம்பி விஜய்".. மிஷ்கின் கொடுத்த "லியோ" அப்டேட்.. என்னன்னு பாருங்க!

Feb 27, 2023,02:23 PM IST
"என் அருமை தம்பி விஜய்யுடன் ஒரு நடிகனாக இந்த படத்தில் பணியாற்றியதை நினைத்து சந்தோசம் அடைகிறேன்" என இயக்குநர் மற்றும் நடிகருமான மிஷ்கின் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்துள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், நடிகை த்ரிஷா, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பிரிதிவிராஜ், ஆக்க்ஷன் கிங் அர்ஜுன், கெளதம் மேனன், மிஷ்கின் என ஏகப்பட்ட திரை பட்டாளங்கள் நடிப்பில் உருவாகிவரும் படம் "லியோ". இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வருகிறது.



நடிகர் விஜய் நடிப்பில் வெளியான 'வாரிசு' திரைப்படம் உலகமெங்கும் வெளியாகி கோடிக்கணக்கில் வசூல் சாதனை செய்தது. வசூலில் வேற லெவல் செய்தாலும் விமர்சனம் ரீதியாக இப்படம் ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை.. விஜயின் 'பீஸ்ட்' படத்தால் ரொம்பவே வெக்ஸ் ஆன விஜய் ரசிகர்கள் 'வாரிசு' படமாவது ஆறுதல் கொடுக்கும் என எதிர்பார்த்த நிலையில் இப்படமும் ஏமாற்றத்தையே கொடுத்தது.

தொடர் தோல்வியால் மனம் உடைந்துபோன விஜய் ரசிகர்களுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மூலம் நல்ல சேதி வந்தது. தளபதி 67 படத்தை லோகேஷ் தான் இயக்க போகிறார் என தகவல் வெளியான நிலையில் அதனை உறுதி படுத்தும் விதமாக தளபதி 67 படத்தின் டைட்டில் வீடியோ வெளியானது.

விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கும் இப்படத்துக்கு லியோ என பெயரிடப்பட்டது, படத்தின் டைட்டில் ஒரு பக்கம் இருந்தாலும் இந்த வீடியோ விஜய் ரசிகர்களை துள்ளாட்டம் போடவைத்தது. டைட்டில் வீடியோவை பார்த்தே "படம் கண்டிப்பா பிளாக் பஸ்டர் ஹிட் தான்" என ரசிகர்கள் முடிவெடுத்துவிட்டார்கள்..




டைட்டில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வந்த நிலையில் மற்றொரு அப்டேட் வெளியாகி ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தியது. லியோ படக்குழுவினர் படப்பிடிப்புக்காக காஷ்மீர் செல்வதாக தகவல் வெளியானது. இந்நிலையில் காஷ்மீரில் லியோ படத்திற்கான படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது.

இந்த அப்டேட்டை இயக்குனர் மிஷ்கின் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், இன்று காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பினேன்.. மைனஸ் 12 டிகிரியில் 500 பேர் கொண்ட லியோ படக்குழு கடுமையாக உழைத்து என்னுடைய பகுதியை நிறைவு செய்தது.. எனவும் படக்குழுவினர், ஸ்டண்ட் மாஸ்டர், இணை இயக்குனர்கள், இயக்குநர் லோகேஷ் மற்றும் நடிகர் விஜய்யை பாராட்டியும், லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையும் எனவும் ட்விட் செய்துள்ளார். 

ஏற்கனவே லோகேஷ், விஜய் கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் மிக பெரிய வெற்றியை பெற்ற நிலையில் தற்போது மீண்டும் இணைந்துள்ள இந்த கூட்டணி வெற்றி பெற வேண்டும் என விஜய் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்