சென்னை: என்னுடைய நிஜ கதாபாத்திரம் தான் போர் படத்தில் நான் நடித்துள்ள ரிஷிகா கேரக்டர் என்று கூறியுள்ளார் நடிகை சஞ்சனா நடராஜன்.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பல படங்களில் நடித்து திரையுலகில் ஒரு முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் சஞ்சனா. 2014ம் ஆண்டு வெளியான நெருங்கிவா முத்தமிட படத்தில் நாயகியின் தோழியாக நடித்தவர். தமிழ் மொழியை நேர்த்தியாக பேசி, தனித்துவமான கதாபாத்திரங்களில் பாராட்டத்தக்க நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரக்கூடியவர் நடிகை சஞ்சனா நடராஜன்.
இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமான 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படத்தில் அவர் தனது சிறப்பான நடிப்பிற்காக பாராட்டுகளைப் பெற்றார். அடுத்து அவர் நடிப்பில் வெளியாக உள்ள 'போர்' திரைப்படத்தை எதிர்பார்த்து ஆவலோடு காத்துள்ளார்.
போர் படத்தின் டீசரில் அவரது டிரெண்டி மற்றும் ஃபேஷனபிள் தோற்றம் அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. படத்தில் சஞ்சனா தனது கதாபாத்திரத்தைப் பற்றி பேசுகையில், 'ரிஷிகா' என்ற மருத்துவ மாணவியாக நடித்துள்ளேன். இந்த படத்தில் தான் நடித்துள்ள ரிஷிகா கதாபாத்திரம் தனது நிஜ வாழ்க்கை இயல்பை ஒத்திருக்கிறது. நண்பர்கள் குழுவைச் சுற்றி சுழலும் இந்தக் கதை அவர்களின் கடந்த கால சம்பவங்கள் எப்படி தற்போதைய வாழ்க்கையை பாதிக்கிறது என்பதைக் கூறும்.
இது அரசியல் விஷயங்களைப் பேசுவதோடு, சில சமூகப் பிரச்சினைகளையும் சொல்லி இருக்கிறது. படக்குழுவில் உள்ள அனைவரும் உற்சாகத்தோடு வேலை செய்தோம். இயக்குநர் பிஜாய் நம்பியாரும் படத்தை தெளிவான பார்வையோடு கொண்டு சென்றார். இந்த படத்தில் எனது கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பார்வையாளர்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். இந்தக் கதை நிஜ சம்பவங்களின் அடிப்படையில் உருவானது என்று சஞ்சனா நடராஜன் கூறினார்.
கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!
அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்
குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!
good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?
என்னென்ன காயெல்லாமோ சாப்பிட்டிருப்பீங்க.. தோசைக்காய பப்பு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா..!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 18, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
ஹஜ் ஒதுக்கீடு ரத்து...பிரதமர் தலையிட முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கு.. இடைக்கால தடை.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
மதுரை சித்திரை திருவிழா... அன்னதானம் வழங்க விதிமுறைகள் அறிவிப்பு!
{{comments.comment}}