அமைதியான இடத்திற்கு தான் என் மகள் சென்றிருக்கிறாள்.. விஜய் ஆண்டனி உருக்கம்

Sep 22, 2023,10:44 AM IST

சென்னை:  இந்த உலகத்தை விட சிறந்த ஜாதி, மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்கு தான் என் மகள் சென்று இருக்கிறாள் என்று இசையமைப்பாளர் - நடிகர் விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.


சமீபத்தில் விஜய் ஆண்டனியின் மகள் மீரா மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். மீராவின் தற்கொலை தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவருடைய இறுதி சடங்குகள் முடிந்த நிலையில், தற்போது விஜய் ஆண்டனி ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான வார்த்தைகளால் பதிவிட்டு உள்ளார். 


இந்த பதிவு வைரலாகி வருவதுடன் காண்போரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  அதேசமயம், மிகுந்த நம்பிக்கையுடன் விஜய் ஆண்டனி வடித்துள்ள இந்த வார்த்தைகள் ஒரு வகையான ஆறுதலையும் தருகிறது.



விஜய் ஆண்டனியின் ட்விட்டர் பக்கத்தில் அவர் போட்டுள்ள பதிவு:


அன்பு நெஞ்சங்களே


என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள்.


அவள் இப்போது இந்த உலகத்தை விட சிறந்த ஜாதி, மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்கு தான் சென்று இருக்கிறாள்.  என்னிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறாள். 


அவளுடன் நானும் இறந்து விட்டேன் .


நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்து விட்டேன்.


அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும் அவளே தொடங்கி வைப்பாள்.


உங்கள் 

விஜய் ஆண்டனி


மீண்டு வரட்டும்


நடிகர் விஜய் ஆண்டனி இந்தப் பதிவில் தனது மகள் பெயரில் நல்ல காரியம் செய்வதாக அறிவித்துள்ளார். இது பலருக்கும் நம்பிக்கையை அளித்துள்ளது. விஜய் ஆண்டனி தனது பெரும் துயரத்திலிருந்து விரைவில் மீண்டு விடுவார் என்ற நம்பிக்கையே அது.


அவர் செய்யப் போகும் நல்ல காரியம் எதுவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. தனது மகளின் பெயரில் அறக்கட்டளை நிறுவுதல், பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு ஆதரவு அளித்தல் போன்ற வழிகளில் விஜய் ஆண்டனி நேரம் செலவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


அவரின் மன வலிமை உண்மையிலேயே வரவேற்கத்தக்கதாகும். அவர் செய்யும் நல்ல காரியத்திற்கு ஒட்டுமொத்த மக்களும் துணை நிற்பார்கள் என நம்பலாம்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்