குறளரசன் - நபீலா தம்பதிக்கு ஆண் குழந்தை.. மீண்டும் தாத்தாவானார் டி. ஆர்.. சிம்பு இப்போ பெரியப்பா!

Jan 23, 2024,01:01 PM IST

சென்னை: டி.ராஜேந்தரின் இளைய மகனும், சிம்புவின் தம்பியுமான குறளரசன் - நபீலா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் மீண்டும் தாத்தா ஆனார் டி.ராஜேந்தர். சிம்பு பெரியப்பாவாகி விட்டார்.


டி. ராஜேந்தர் - உஷா ராஜேந்தர் தம்பதிக்கு இலக்கியா என்ற மகளும், சிம்பு, குறளரசன் என இரு மகன்களும் உள்ளனர். சிம்புதான் மூத்தவர். தங்கை இலக்கியாவுக்கு கல்யாணமாகி குழந்தை உள்ளது. சிம்பு தான் இன்னும் மணம் புரியாமல் உள்ளார். குறளரசனுக்கும் திருமணமாகி விட்டது. அவர் இசையமைப்பாளராக இருக்கிறார்.


தந்தை டி.ராஜேந்தர்-தாய் உஷா முன்னிலையில் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன். குறளரசன் சிறு வயதிலிருந்தே இஸ்லாம் மார்க்கத்தின் மீது நாட்டம் கொண்டிருந்தார். இதனால் இஸ்லாத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டார். அண்ணா சாலையிலுள்ள மக்கா மசூதி ஜமாத்தார் முன்னிலையில் குறள் இஸ்லாமுக்கு மாறினார். குறளரசன் சிறு வயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். பின்னர் இசையமைப்பாளராக அறிமுகமானார். 




இதுகுறித்து அப்போது டி.ராஜேந்தர் கூறுகையில், அவர் விருப்பத்துக்கேற்ப பெயர் ஒன்றை வைத்துக்கொள்ள ஜமாத்தில் கூறியுள்ளனர். நானுமே அனைத்து மதத்துக்கும் பொதுவானவன். நாகூர் தர்கா, வேளாங்கண்ணி கோயில், முருகன் கோயில் என மத வேறுபாடில்லாமல் அனைத்து ஸ்தலங்களுக்கும் போய் வருகிறவன். எங்களது தயாரிப்பு நிறுவனத்தின் லோகோ கூட அனைத்து மதங்களின் குறியீடுகளைக்  கொண்டதாகத்தான் இருக்கும் என பேசியிருந்தார் டி.ராஜேந்தர்.


குறளரசனுக்கு, நபீலா என்பவருடன் கடந்த 2019-ம் ஆண்டு  திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தாய்மை அடைந்திருந்த நபீலா கடந்த சில தினங்களுக்கு முன் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார். தாயும் சேயும் நலமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மகள் மூலமாக ஏற்கனவே தாத்தாவாக புரமோஷன் ஆகியிருந்த டி.ராஜேந்தர் தற்போது இளைய மகன் குறளரசன் அப்பா ஆகியுள்ளதால், இரண்டாவது முறை தாத்தாவாகியுள்ளார் டி.ஆர். அதேசமயம், தாய்மாவாக புரமோஷன் ஆகியிருந்த சிம்பு இப்போது பெரியப்பாவாகியுள்ளார். 


எல்லாம் கரெக்டா போயிட்டிருக்கு.. சிம்பு எப்போது "முக்கியமான" புரமோஷனைப் பெறுவார்.. என்பதுதான் அனைவரின் அன்பான எதிர்பார்ப்பு + கோரிக்கையாக உள்ளது. சீக்கிரம் சட்டுப்புட்டுன்னு முடிவெடுத்து செட்டிலாகுங்க பாஸ்!

சமீபத்திய செய்திகள்

news

LPG Cylinder price hike: வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூபாய் 50 உயர்வு.. மக்கள் அதிர்ச்சி..!

news

பெட்ரோல் - டீசல் மீதான கலால் வரி ரூ.2 உயர்வு... நுகர்வோருக்கு பாதிப்பு ஏற்படாது... மத்திய அரசு

news

தமிழகத்தில் பாஜக வளர்கிறது என்று நிரூபித்தவர் அண்ணாமலை.. சீமான் புகழாரம்

news

சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான வயது வரம்பை 33 ஆக உயர்த்த வேண்டும்: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

தமிழக அரசியலில் தனிப்பெரும் தலைவராக சீமான் திகழ்கிறார்: பாஜக தலைவர் அண்ணாமலை புகழாரம்!

news

வங்கக்கடலில் உருவானது.. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் ஒரு நாள் சஸ்பெண்ட்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!

news

இது ஏப்ரல் மாதமாகவே இருக்காது.. கூலான கோடையாக இருக்கும்.. அடுத்த 10 நாட்கள் மழை.. வெதர்மேன் அப்டேட்!

news

மன்னார் வளைகுடா பகுதியில்..புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்.. முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்