சென்னை: குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தருவதில் இந்த அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. 200-க்கு மேற்பட்ட சத்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. 2024 ஆண்டில் கொலை குற்றம் 6.8% குறைந்துள்ளது என்று சட்டசபையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசியுள்ளார்.
கடந்த சில நாட்களாக சட்டபேரவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்த விவாதம் நடைபெற்றது. அப்போது ஒரே நாளில் 4 கொலைகள் நடைபெற்று இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கூற அதற்கு பதிலளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், குற்றங்கள் நடக்கவில்லை என்று நான் சொல்லவில்லை. நடந்த சம்பவங்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், உங்களைப் போல நான் டிவியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று கூறவில்லை. அதிமுக ஆட்சியில் நடந்த தூத்துக்குடி சாத்தான் குளம் பிரச்சனையை நீங்கள் மறந்துவிடக்கூடாது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து எதிர்க்கட்சி தலைவர் போகிற போக்கில் சொல்லி கொண்டு போய் இருக்கிறார். தைரியம் இருந்தால் என் பதிலை கேட்டுவிட்டு அதிமுகவினர் செல்ல வேண்டும். இது குறித்த புள்ளி விபரங்களை தெரிவிக்க விரும்புகின்றேன். சிவகங்கையில் நடந்த கொலைக்கு குடும்பத்தகராறு தான் காரணம். மதுரை குற்ற சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த சரித்திரப்பதிவேடு குற்றவாளியான ஜான் மனைவியுடன் நேற்று காரில் சென்றபோது கொலை நடந்துள்ளது. ஏற்கனவே நடந்த கொலைக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ஜான் கொல்லப்பட்டதாக விசாரணையில் தெரிகிறது. கொலையாளிகள் சதீஷ், சரவணன், பூபாலன் உள்ளிட்டோரை போலீசார் சுட்டுப்பிடித்தனர். ஈரோடு சம்பவம் பழிவாங்கும் நடவடிக்கை என விசாரணையில் தெரியவந்துள்ளது.
போலீசார் சுதந்திரமாக செயல்பட்டு குற்றவாளிகள் யாராக இருந்தாலும், எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுது்து வருகின்றனர். எந்த வித பாரபட்சமும் காட்டப்படுவதில்லை. குற்றச்சம்பவங்கள் நடந்த பிறகு துரித நடவடிக்கையும், குற்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் என போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
தொடர்ந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் கூலிப்படையினர் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2023ல் கொலை முயற்சிகள் 49,220 இருந்த நிலையில், 2024ல் 31,000மாக குறைந்துள்ளது. ஒரே ஆண்டில் 17,782 குற்றங்கள் குறைத்து இருக்கிறோம். சில கொலை குற்றங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகும் போது அதிக குற்றங்கள் நடப்பது போல் திட்டமிட்டு பரப்படுகிறது. உண்மையில் கொலை குற்றங்கள் குறைந்துள்ளது.
குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தருவதில் இந்த அரசு சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறது. அதிமுக ஆட்சியில் தான் அதிக கொலைகள் நடந்துள்ளன.கோவிட் காலத்திலும் அதிக கொலைகள் நடந்துள்ளன. அரசின் மீது குற்றம் சுமத்துபவர்கள் கடந்த ஆட்சி காலத்தில் நடத்த கொலைகள் குறித்து எண்ணி பார்க்க வேண்டும். போலீசாரின் கடுமையான நடவடிக்கையினால், கடந்த 12 ஆண்டில் 2024ம் ஆண்டில் மிகவும் குறைவாக 1,545 கொலைகள் நடந்துள்ளன. இது தான் உண்மை. குற்றங்களை தடுத்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்து பொது அமைதியை நிலைநாட்டி தமிழக போலீசார் எனது தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
அதிமுக ஆட்சியிலே அதிக கொலைகள் நிகழ்ந்துள்ளது. 2012-ல், 1,943 கொலைகள் நிகழ்ந்துள்ளன. இதுதான் கடந்த 12 ஆண்டுகளில் அதிகபட்ச கொலை நடைபெற்ற ஆண்டு. 2013-ல், 1,927 கொலைகள் நிழந்துள்ளன. கொரோனா காலத்தில் லாக் டவுன் இருந்த போதும் அதிக கொலை நிகழ்ந்துள்ளது. குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தருவதில் இந்த அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. 200-க்கு மேற்ட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. 2024 ஆண்டில் கொலை குற்றம் 6.8% குறைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!
வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்
கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!
வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!
சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து.. கருப்பு பட்டை அணிந்து சட்டசபைக்கு வந்த.. எம்எல்ஏக்கள்..!
Today gold rate:புதிய உச்சத்தில் தங்கம் விலை... சவரனுக்கு எவ்வளவு உயர்வு தெரியுமா?
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில்..மக்களவையில் நிறைவேறியது.. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா
தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக.. ஏப்ரல் 5ல் மின் நுகர்வோருக்கான.. சிறப்பு முகாம் ஏற்பாடு..!
மேகம் கருக்குது மழை வர பாக்குது.. தமிழ்நாட்டில் இன்று முதல் 5 வரை கனமழைக்கு வாய்ப்பு..!
{{comments.comment}}