மும்பை: இந்திய பங்குச்சந்தைகளின் கடும் வீழ்ச்சி காரணமாக முதலீட்டாளர்களுக்கு ரூ.15 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சரிவால் அடுத்த சில மாதங்களுக்கு பங்குச்சந்தை மிகவும் சவாலாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி நிலவியது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,287.82 புள்ளிகள் சரிந்து 79.734.02 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 451.75 புள்ளிகள் சரிந்து 24,341.90 ஆக வர்த்தகமானது.
கடந்த மாதத்தில் வரலாற்று உச்சம் தொட்டு வந்த பங்குச்சந்தை ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் கடும் சரிவடைந்துள்ளது. அமெரிக்க பொருளாதார நிலை, அமெரிக்காவில் கடந்த ஜூலை மாதத்தில் வேலை வாய்ப்பு நிலை மோசம் அடைந்தது மற்றும் அந்நாட்டில் வேலை இன்மை 4.3% உயர்வு உள்ளிட்ட காரணங்களால் ஜப்பான், தென்கொரிய, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்தது. ஜப்பானில் வட்டி வீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இந்திய பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு பட்ஜெட் அறிவிப்பும் பங்குச்சந்தை முதலீட்டவர்களுக்கு சாதகமாக இல்லை என்பதாலும் பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமானது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்து ஒரு டாலர் 83.75 ரூபாயாக உள்ளது. இந்த நிலையில் வர்த்தகம் தொடங்கிய ஒரு மணி நேரத்தில் பங்குச்சந்தை வீழ்ச்சியால் முதலீட்டாளர்களுக்கு ரூபாய் 15 லட்சம் 5 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. bsc ரூபாய் 457 லட்சம் கோடியில் இருந்தது 447 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. சர்வதேச அளவிலான பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவு இந்தியாவிலும் எதிரொலிக்கிறது.
பங்குச்சந்தையில், அப்பல்லோ மருத்துவமனை மற்றும் சன் ஃபார்மா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும், மாருதி சுசுகி, டாடா மோட்டார்ஸ், ஹிண்டால்கோ, டைட்டன் கம்பெனி மற்றும் டாடா ஸ்டீல் ஆகிய பங்குகள் சரிவுடனும் வர்த்தகமானது. இந்திய பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்துள்ளது முதலீட்டாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. ஜார்க்கண்ட் ஆட்சியை தக்க வைத்தது ஜேஎம்எம் காங் கூட்டணி
வங்ககடலில் உருவானது.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் மிக கன மழைக்கு வாய்ப்பிருக்கா?
வளர்ச்சிக்கும், நல்லாட்சிக்கும் கிடைத்த பெரும் வெற்றி .. மகாராஷ்டிரா மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி
Priyanka Gandhi.. வயநாடு இடைத் தேர்தலில் பிரியங்கா காந்தி அதிரடி.. அண்ணன் சாதனையை முறியடித்த தங்கை!
14 மாநிலங்கள்.. 48 சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தல்.. பாஜக 18, காங்கிரஸ் 8, திரினமூலுக்கு 6!
மகாராஷ்டிரா வெற்றி.. வரிந்து கட்டிக்கொண்டு பட்டாசு வெடித்த தமிழிசை.. அடுத்து சொன்ன அதிரடி வார்த்தை!
Wayanad by poll resutls.. அபார வெற்றியை நோக்கி பிரியங்கா காந்தி.. 3.20 லட்சம் வாக்குகள் வித்தியாசம்!
Maharashtra poll results: உத்தவ், சரத் பவாருக்கு கெட் அவுட் சொன்ன ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவார்!
Wayanad: வயநாட்டில் கொடி நாட்டிய பிரியங்கா காந்தி.. 4வது தலைமுறையிலிருந்து மேலும் ஒரு எம்.பி
{{comments.comment}}