"ஒரு போஸ்ட்டும் வேண்டாம்".. நாட்டை விட்டே கிளம்பிப் போன நீதிபதி.. இலங்கையில் அதிர்ச்சி!

Oct 01, 2023,01:42 PM IST

கொழும்பு: இலங்கையில் நீதித்துறைக்கு எந்த அளவுக்கு அச்சுறுத்தல் உள்ளது, நெருக்கடி தரப்படுகிறது என்பதற்கு உதாரணமாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி டி. சரவண ராஜாவின் ராஜினாமா சம்பவம் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.


தனக்கு கடும் நெருக்கடி தரப்படுவதாலும், உயிருக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாலும்,  கடமையைச் செய்ய முடியாத அளவுக்கு அழுத்தம் தரப்படுவதாலும் தனது வேலையை விட்டே ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டும் வெளியேறி விட்டார் நீதிபதி சரவணராஜா. இந்த விவகாரம் இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுகுறித்து விசாரணை நடத்த இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தற்போது உத்தரவிட்டுள்ளார்.




இலங்கையில் தமிழர் தாயகமான வடக்கு மாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாக இருந்து வந்தவர்தான் டி. சரவண ராஜா. இவர் இலங்கை நீதித்துறை ஆணையருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். 


அதில், மாவட்ட நீதிபதி பதவி, மாவட்ட மாஜிஸ்திரேட் பதவி, குடும்ப நீதிமன்ற நீதிபதி பதவி, பிரைமைரி கோர்ட் நீதிபதி பதவி, ஸ்மால் கிளெம்ய்ஸ் கோர்ட் நீதிபதி பதவி, சிறார் நீதிமன்ற பதவி உள்ளிட்டவற்றை, தொடர் கொலை மிரட்டல் காரணமாகவும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவும் ராஜினாமா செய்கிறேன் என்று கூறியிருந்தார். ராஜினாமா செய்த கையோடு நாட்டை விட்டும் அவர் வெளியேறி விட்டதாக சொல்கிறார்கள்.

நீதிபதி சரவணராஜா விவகாரத்தால் இலங்கை நீதித்துறைக்கு பெரும் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவில் இது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதையடுத்து இந்த விவகாரம் குறித்தும், நீதிபதிக்கு வந்த மிரட்டல்கள் குறித்தும் விசாரணை நடத்த அதிபர் ரணில் விக்கிரமசிங்கே உத்தரவிட்டுள்ளார்.


பாரம்பரியமான, தொன்மையான இடம் ஒன்றில் புத்த மத விஹாரை கட்டுவதற்கு தடை  விதித்து ஒரு வழக்கில் தீர்ப்பளித்திருந்தார் நீதிபதி சரவண ராஜா. இதற்காக அவருக்கு கடும் மிரட்டல்களும், எதிர்ப்புகளும் கிளம்பியதாக கூறப்படுகிறது. சிங்கள இனத்தவர்களின் மிரட்டலுக்குள்ளானார் சரவண ராஜா.  அதேபோல சம்பந்தப்பட்ட பகுதியில் மிகப் பெரிய அளவில் உடல்கள் புதைக்கப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் அந்த இடத்தை தோண்டி ஆய்வு நடத்தவும் நீதிபதி சரவண ராஜா உத்தரவிட்டிருந்தார். அதுதொடர்பாகவும் அவருக்கு மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது.


சமீபத்திய செய்திகள்

news

தவெக மாநாடு.. அரை மணி நேரம், ஒரு மணி நேரம் இல்லை நண்பா.. 2 மணி நேரம் பேசப் போறாராம் விஜய்!

news

தேவர் ஜெயந்தி, மருதுபாண்டியர் நினைவு தினம்.. மதுரையில் 3 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடல்!

news

கந்த சஷ்டி விரதம் 2024 : கோவிலுக்குப் போகாமல்.. வீட்டிலேயே எளிமையாக விரதம் இருக்கும் முறை

news

கோர்ட்டுக்கு போகாமலேயே இனி விவாகரத்து வாங்கலாம்... சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

news

கந்தசஷ்டி விழா 2024.. திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குப் போகும்.. பக்தர்களுக்கு அறைகள் ரெடி!

news

மாமா மாமா உன்னைத்தானே.. திண்ணையில் அமர்ந்து கீரை ஆய்ந்தபடி.. அசத்தலாக பாடும் பெண்!

news

35 வருஷமாக.. ஆனால் முதல் முறையாக இப்போது எனக்காக பிரச்சாரம் செய்கிறேன்.. பிரியங்கா காந்தி

news

வயநாடு இடைத்தேர்தல்.. ஆயிரக்கணக்கானோருடன் பேரணி.. பிரியங்கா காந்தி வேட்பு மனு தாக்கல்

news

சுவையான கொங்கு நாட்டு நெல்லிக்காய் தொக்கு.. சூப்பரா இருக்கும்.. செஞ்சு பாக்கலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்