எனக்கு எந்த பொறுப்பும் வேண்டாம் தாத்தா.. டாக்டர் ராமதாஸ் வழங்கிய பதவியை நிராகரித்தார் முகுந்தன்?

Dec 29, 2024,05:15 PM IST

விழுப்புரம்: பாமக இளைஞர் சங்க தலைவர் பதவியும் வேண்டாம், தற்போது வகித்து வரும் பாமக ஊடகப் பிரிவு பொறுப்பும் வேண்டாம். நான் சாதாரண தொண்டராக மட்டும் இருந்து கொள்கிறேன் என்று கூறி விட்டார் டாக்டர் ராமதாஸின் பேரன் முகுந்தன். 


பாமக சார்பில் நடத்தப்பட்ட புதுச்சேரி சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் தனது மகள் வழிப் பேரனான முகுந்தனை இளைஞர் சங்க தலைவராக நியமிப்பதாக டாக்டர் ராமதாஸ் அறிவித்ததால் கோபமடைந்த டாக்டர் அன்புமணி ராமதாஸ், அதற்கு மேடையிலேயே பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவருக்கும் டாக்டர் ராமதாஸுக்கும் இடையே வாக்குவாதம் வெடித்தது. இதனால் பாமகவினர் அதிர்ச்சி அடைந்தனர். 


இந்த விவகாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் கூட்டம் முடிந்ததும் டாக்டர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்துக்கும், அன்புமணி ராமதாஸ், சென்னைக்கும் புறப்பட்டுப் போனார்கள். அடுத்து என்ன நடக்கும், பாமகவில் பிளவு ஏற்படுமா என்று பரபரப்பு கூடிக் கொண்டே போன நிலையில் நேற்று இரவு தைலாபுரம் தோட்டத்தில் அடுத்தடுத்து பல்வேறு சந்திப்புகள் நடந்துள்ளன. அதில் முக்கியமானது முகுந்தன் மற்றும் அவரது குடும்பத்தினர் டாக்டர் ராமதாஸை சந்தித்துப் பேசியதுதான்.




தாத்தா டாக்டர் ராமதாஸை, தனது குடும்பத்தோடு போய் பார்த்த முகுந்தன், தாத்தா எனக்கு இப்போது எந்தப் பொறுப்பும் வேண்டாம். மாமாவுக்கு (டாக்டர் அன்புமணி) ஆட்சேபனை இருப்பதால் நான் எந்தப் பொறுப்பையும் வகிக்க விரும்பவில்லை. ஊடகப் பிரிவு பொறுப்பும் கூட வேண்டாம். வெறும் தொண்டனாக இருந்து கொள்கிறேன். சிறிது காலத்திற்குப் பிறகு நீங்கள் ஏதாவது பொறுப்பு கொடுத்தால் அதை ஏற்க நான் தயார். இப்போது எதுவும் வேண்டாம் என்று கூறியுள்ளார்.


அதற்கு டாக்டர் ராமதாஸ், இளைஞர் சங்க தலைவர் பதவியை வேண்டாம் என்று சொல்கிறாய் சரி, இப்போது இருக்கும் பதவியை ஏன் உதறுகிறாய் என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த முகுந்தன், எந்தப் பொறுப்பும் இப்போது வேண்டாம் தாத்தா. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று திட்டவட்டமாக கூறி விட்டாராம். இதையடுத்து அவரது விருப்பத்தை ராமதாஸும் ஏற்றுக் கொண்டாராம். அதன் பின்னர் முகுந்தன் மறறும்  குடும்பத்தினர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்களாம்.


இந்த  சந்திப்பு குறித்த விவரம் டாக்டர் அன்புமணிக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்தே அவர் டாக்டர் ராமதாஸை சந்திக்க சம்மதித்தாராம். தற்போது சென்னையிலிருந்து கிளம்பி தைலாபுரம் வந்து கொண்டுள்ளார் அன்புமணி. ராமதாஸை சந்தித்த பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பு இருக்கலாம் என்று தெரிகிறது. அப்போது ராமதாஸுடன் இணைந்து பேசுவார் அன்புமணி என்று எதிர்பார்க்கப்படுகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கெளதம் கம்பீர், ரோஹித் சர்மாவை நேரில் அழைத்து விசாரிக்க பிசிசிஐ முடிவு.. தொடர் தோல்விகளால் கோபம்!

news

7ஜி ரெயின்போ காலனியை கையில் எடுத்த செல்வராகவன்.. terrible comboவுடன்.. செம அப்டேட்!

news

2025ம் ஆண்டின் முதல் அதிரடி.. தடாலடியாக தனது பெயரை மாற்றினார் எலான் மஸ்க்!

news

Happy New Year 2025.. பிறந்தது 2025.. இந்தியா முழுவதும் ஆட்டம் பாட்டத்துடன்.. தெறிக்க விட்ட மக்கள்

news

மார்கழி 18 - திருவெம்பாவை 18 - அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்

news

மார்கழி 18 - ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 18 - உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்

news

2025 வருக வருக.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

news

திருவள்ளுவரைக் கொண்டாடிக் கொண்டே இருப்போம்.. அது நமது கடமை.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

Happy Pongal மக்களே.. ஜனவரி 3 முதல் பொங்கல் தொகுப்பு டோக்கன் விநியோகம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்