பயணிகளின் கவனத்திற்கு.. மார்ச் 3.. 150 எக்ஸ்ட்ரா பேருந்துகள்.. எம்டிசி சூப்பர் அறிவிப்பு!

Mar 02, 2024,10:31 PM IST

சென்னை: மார்ச் 3ம் தேதியன்று சென்னை தாம்பரம் முதல் கடற்கரை வரையிலான வழித்தடத்தில் ரயில்வே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்றைய தினம் 150 பேருந்துகளை கூடுதலாக இயக்குவதாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.


சென்னையில் தாம்பரம் முதல் கடற்கரை வரையிலான மார்க்கத்தில் ரயில்வே பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை தோறும் இது நடைபெற்று வருகிறது. இதையொட்டி சிறப்புப் பேருந்துகளை இயக்குமாறு மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு, தெற்கு ரயில்வே கோரிக்கை விடுத்திருந்தது.


அதன்படி தற்போது 150 கூடுதல் பேருந்துகளை இயக்குவதாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக எம்டிசி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

03.03.2024 அன்று தென்னக இரயில்வேயின் பராமரிப்பு பணிகள் காரணமாக, மா.போ.கழகம் சார்பாக காலை 10.00 மணி முதல் மாலை 15.30 மணி வரை தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கெங்கு.. எத்தனை பேருந்துகள்?




அதன்படி 18ஏ பேருந்தானது, பிராட்வே முதல் தாம்பரம் வரையிலான வழித்தடத்தில் கூடுதலாக 60 பேருந்துகள் இயக்கப்படும்.  18ஜி வழித்தடத்தில் கூடுதலாக 20 பேருந்துகள் இயக்கப்படும். 18ஏசிடி கிண்டி முதல் கிளாம்பாக்கம் வரையிலான வழித்தடத்தில் கூடுதலாக 10 பேருந்துகள் இயக்கப்படும். 


பி18 கொருக்குப்பேட்டை - தாம்பரம் மார்க்கத்தில் கூடுதலாக 30 பேருந்துகளும், இ18 பிராட்வே - கூடுவாஞ்சேரி மார்க்கத்தில் கூடுதலாக 20 பேருந்துகளும் இயக்கப்படும். ஜி18 தியாகராய நகர் - கூடுவாஞ்சேரி மார்க்க்தில் கூடுதலாக 10 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்