சென்னை மக்களே.. கேமராவோடு கிளம்புங்க.. போட்டோ எடுங்க.. பரிசுப் பொருள் காத்திருக்கு!!

Jul 25, 2024,03:28 PM IST

சென்னை: பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்.. இந்தப் பாட்டைப் பிடிக்காதவங்க இருக்க முடியுமா.. அப்படியே ஜன்னலோரத்தில் அமர்ந்தபடி பஸ்சில் பயணிக்கும்போது காணும் காட்சிகள் நமது கண் கேமராவில் சிக்கி மனதில் வந்து நிழலாக படியும்.. அதை ஏங்க அங்கேயே வச்சு வேஸ்ட் பண்றீங்க..  அப்படியே போட்டிக்கு அனுப்பி வைங்க என்று இப்போது சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அன்போடு கேட்டுக் கொண்டுள்ளது.


சென்னை அழகு.. எப்ப தெரியுமா.. மழை நேரத்தில்.. அப்படி ஒரு பேரழகோடு ஜொலிக்கும் தமிழ்நாட்டின் தலைநகரம்.. அந்த நேரத்தில் பேருந்து பயணம், அதிலும் ஜன்னலோர பயணம் படு சுகமானது, சுவாரஸ்யமானது. முகத்தில் வந்து மோதும் காற்று, கடந்து போகும் மனிதர்கள், கட்டடங்கள் எல்லாமே அப்படி ஒரு சுகானுபவத்தைக் கொடுக்கும்.




இப்போதுதான் எல்லோருமே கேமராமேன் மற்றும் கேமராவுமன்தானே.. செல்லும் இடமெல்லாம் எல்லோரும் செல்போனுடன்தானே போகிறோம்.. போனை எடுத்து கிளிக்கினால் அழகான போட்டோ கிடைத்து விடும். இப்படி நீங்கள் சென்னை நகரில் பஸ்ஸில் பயணிக்கும்போது எடுக்கும் புகைப்படங்களை இனி சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு அனுப்பி வச்சா அவங்க அதில் சிறந்ததை தேர்வு செய்து பரிசு கொடுக்கப் போறாங்க மக்களே.


இதுதொடர்பாக எம்டிசி நிர்வாகம் போட்டுள்ள எக்ஸ் பதிவில்,  மாநகர பேருந்துகளின் ஜன்னலிலிருந்து நம் சென்னையை கண்டிருக்கிறீர்களா? பரபரப்பான, அழகான பயணம்!  சிறந்த புகைப்படங்களை வரவேற்கிறோம்!  பரபரப்பான நேரத்தின் பயணம், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் அர்ப்பணிப்பு, சென்னையின் மறைந்திருக்கும் அழகை உங்களின் புகைப்படம் மூலம் வெளிக்காட்டுங்கள்! சிறந்த புகைப்படத்திற்கு பரிசுகள்‌ காத்திருக்கின்றன என்று தெரிவித்துள்ளனர்.


போட்டி தொடர்பான விவரங்களை அறிய இந்த இணையதளத்தைத் தொடர்பு கொள்ளலாம்: http://bit.ly/photoguidejannal




அதேபோல போட்டியில் கலந்து கொள்ள, இந்த இணைப்புக்குப் போங்க:  http://bit.ly/jannalseatphoto


இந்த போட்டியில் கலந்து கொள்ள கடைசி நாள் சுதந்திர தினம்தாங்க..  அதாவது ஆகஸ்ட் 15. பிறகென்ன மக்களே செல்போனை எடுங்க.. கிளிக்குங்க.. அனுப்பி வைங்க.. என்ஜாய் பண்ணுங்க.. பரிசு வெல்லுங்க.. செல்போனை எடுங்க.. கிளிக்குங்க.. அனுப்பி வைங்க.. என்ஜாய் பண்ணுங்க.. பரிசு வெல்லுங்க.. ரிப்பீட்டு!

சமீபத்திய செய்திகள்

news

Thala is Back: மீண்டும் கேப்டனானார் தல தோனி.. ருத்துராஜ் கெய்க்வாட் ஐபிஎல் தொடரிலிருந்து விலகல்!

news

விடைபெறுகிறார் அண்ணாமலை.. வந்தாச்சு தமிழ்நாடு பாஜக தலைவர் தேர்தல்.. நாளை விருப்ப மனு!

news

பாமக தலைவர் பதவியிலிருந்து டாக்டர் அன்புமணி நீக்கம்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு

news

பாமகவை பிளவுபடுத்துவாரா டாக்டர் அன்புமணி.. ராமதாஸின் திட்டம் என்ன?.. பரபரப்பில் தமிழக அரசியல்

news

தமிழகத்திற்கு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகையால்.. பாஜக அரசியல் சூழல் எழுச்சி பெறுமா‌..?

news

மாநில உரிமை காக்கும் போராட்டத்தின் முன்னோடி திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

news

Flower Market Price: பங்குனி உத்திரம்... கோயம்பேட்டில் பூக்களின் விலை உயர்வு

news

சிங்கப்பூர் அரசு விழாவில்.. வாழ்வியல் இலக்கியப் பொழில் சிறப்பு உரையாளராக.. முனைவர் மு. ஜோதிலட்சுமி

news

பனையூரில் நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

அதிகம் பார்க்கும் செய்திகள்