சென்னை: நடிகர் ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாக உள்ளதாக பட குழு அறிவித்துள்ளது.
ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் கூட்டணியில் உருவாகியுள்ள மிஸ்டர் எக்ஸ் திரைப்படத்தை இயக்குனர் மனு ஆனந்த் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே விஷ்ணு விஷால் மற்றும் மஞ்சிமா மோகன் கூட்டணியில் எஃப் ஐ ஆர் படத்தை இயக்கி வெற்றி பெற்றிருந்தது நினைவிருக்கலாம். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ,மஞ்சு மற்றும் வாரியர்,அனேகா நாயகிகளாக நடித்துள்ளனர். அவர்களுடன் நடிகர் சரத்குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் டீசர் இன்று வெளியாகிறது. ஆக்சன் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம், ஹிந்தி, ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் ஆர்யா, கௌதம் கார்த்திக், மஞ்சு வாரியர் கூட்டணியில் பான் இந்தியா படமாக உருவாகும் இப்படத்தின் கதைக்களம் எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சீனாவில் மீண்டும் ஒரு கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு.. வவ்வாலிலிருந்து மனிதர்களுக்கு பரவுமாம்!
2000 கோடி அல்ல.. 10000 கோடியே கொடுத்தாலும் சரி.. கையெழுத்துப் போட மாட்டோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
பிரதமர் நரேந்திர மோடியின்.. முதன்மைச் செயலாளரானார்.. சக்திகாந்த தாஸ்.. ஓய்வுக்குப் பின் புதுப் பதவி!
தான் யார்.. எதற்காக வந்தோம் என்பதே கமல்ஹாசனுக்குப் புரியலையே.. தவெகவின் அதிரடி தாக்கு!
பிப்., 26ல் தவெகவின் ஆண்டு விழா.. 2000 பேருக்கு மட்டும் தான் அனுமதி..!
சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா vs பாகிஸ்தான்.. நாளைக்கு ஜெயிக்காம விட்ரக் கூடாதுடா பரமா!
அனல் பறக்கும் பேச்சாளர்.. அதிரடி டிபேட்டர்.. நாம் தமிழர் கட்சியின் அடையாளம்.. யார் இந்த காளியம்மாள்?
தங்கச்சி காளியம்மாள் விலகுவதாக இருந்தால் விலகிக்கலாம்.. ரொம்ப நன்றி என்று சொல்வோம்.. சீமான்
சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள்.. நாம் தமிழர் கட்சிக்கு முழுக்கா?.. பரபரக்கும் இன்விடேஷன்!
{{comments.comment}}