சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆர்ஆர்பி தேர்வு கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டதால் தேர்வாளர்கள் தவிப்பிற்குள்ளான நிலையில், பிற மாநிலங்களுக்கு தேர்வு மையம் வரை சென்று திரும்பிய தேர்வர்கள் செலவு செய்த தொகையை இழப்பீட்டுத் தொகையாக ரயில்வே வாரியம் வழங்க வேண்டும் என மதுரை எம்.பி., சு வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
தெற்கு ரயில்வே உதவி லோகோ பைலட் (RRB) பணியிடங்களுக்காக இன்று ஷிஃப்ட் முறையில் இரண்டு தேர்வுகள் நடைபெற இருந்தது. இந்த தேர்வுகள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ரத்து செய்யப்படுவதாக திடீரென தேர்வு மையங்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் தேர்வாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அதே சமயத்தில் ஆர்ஆர்பி தேர்வு எழுதுவதற்காக தமிழ்நாட்டிலிருந்து தெலுங்கானா போன்ற பிற மாநிலங்களுக்குச் சென்ற இளைஞர்களும் கடுமையாக பாதிப்படைந்தனர். திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் ஏற்கனவே பிற மாநிலங்களில் தேர்வு மையங்கள் அமைக்க வேண்டாம் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இருப்பினும் ரயில்வே நிர்வாகம் அதனைப் பொருட்படுத்தாமல் பிற மாநிலங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இதனால், ஆயிரம் கிலோமீட்டர் கடந்து தேர்வு எழுத சென்ற மாணவர்கள், தேர்வு எழுதாமல் அதிருப்தியில் ஏமாற்றத்துடன் திரும்பி உள்ளனர்.
இந்த நிலையில் மதுரை எம்.பி., சு வெங்கடேசன் பிற மாநிலங்களுக்கு தேர்வு மையம் வரை சென்று திரும்பிய தேர்வர்கள் செலவு செய்த தொகையை இழப்பீட்டுத் தொகையாக ரயில்வே வாரியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில்,
ரயில்வே தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் லோகோ பைலட் காலிப் பணியிடங்களுக்கான CBT தேர்வுக்கு தமிழ்நாட்டில் இருந்து தேர்வெழுதுவோருக்கு 1500 கிலோமீட்டருக்கு அப்பால் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.
அதை மாற்ற வேண்டுமெனக் கோரி தொடர்ச்சியான தலையீடுகளை மேற்கொண்டோம் . ஆனால் உடனடியாக 6000 தேர்வர்களுக்கு தேர்வு மையங்களை தமிழ்நாட்டில் தேர்வு செய்ய முடியவில்லை என பதில் அளித்தது.
இத்தனை தடைகளையும் மீறி இன்றைய தினம் 1000 கிலோ மீட்டருக்கும் மேல் பயணம் செய்து தமிழ்நாட்டு தேர்வர்கள் தேர்வெழுத சென்றனர். ஆனால் இன்று தொழில்நுட்ப காரணங்களால் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக ரயில்வே தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு தேர்வெழுத சென்றவர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தனை ஆயிரம் கிலோமீட்டர்கள் பயணம் செய்து தேர்வெழுத வருவோருக்கான தொழில்நுட்ப ஏற்பாடுகளைக் கூட முன்னெச்சரிக்கையாக செய்திடாமல் இருப்பது ரயில்வே தேர்வு வாரியத்தின் அலட்சியத்தின் உட்சம். இந்த தொழில்நுட்பக் கோளாறு குறித்து முறையான முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டிய ஒரு தேர்வு தேர்வர்களுக்கான குறைந்தபட்ச வாழ்வியல் தேவையையும் சூறையாடுகிறது. இது ரயில்வே தேர்வு வாரியத்தின் மீதான நம்பிக்கையையே கேள்விக்கு உள்ளாக்குகிறது. இதனை ஒரு போதும் ஏற்கமுடியாது. பிற மாநிலங்களுக்கு தேர்வு மையம் வரை சென்று திரும்பிய தேர்வர்கள் செலவு செய்த தொகையை இழப்பீட்டுத் தொகையாக ரயில்வே வாரியம் வழங்க வேண்டும்.
எனவே இதன் பின்னர் அறிவிக்கப்பட உள்ள தேர்வையாவது தமிழ்நாட்டு தேர்வர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வுமையம் அமைத்து நடத்தப்படுவதை ரயில்வே அமைச்சகமும் , ரயில்வே தேர்வு வாரியமும் உறுதிபடுத்த வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி
கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!
சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!
தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!
அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!
ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும். சட்டசபையில் அறிவிப்பு!
வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்
வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!
{{comments.comment}}