புஷ்பா 2 திரைப்படத்தை காண வந்த இடத்தில்.. நெரிசலில் சிக்கி பெண் மரணம்.. மகன் கவலைக்கிடம்!

Dec 05, 2024,10:03 AM IST

ஹைதராபாத்: புஷ்பா 2 படத்தை காண வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கியதில், ஒரு பெண் பலியானார். அவரது மகன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் ரஷ்மிகா மந்தனா கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் புஷ்பா 2. இவர்களுடன் இணைந்து பகத் ஃபாசில், ஸ்ரீலீலா, ராவ் ரமேஷ், சுனில், அனுசுயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். புஷ்பா படத்தின் முதல் பாகம் வெளியாகி தெலுங்கு மட்டுமல்லாமல்  தமிழ் ரசிகர்களிடையேயும் பெரும் வரவேற்பு பெற்றது. இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இடம் பெற்ற ட்விஸ்ட்டை புஷ்பா 2 திரைப்படத்தில் எப்படி படமாக்கப்பட்டுள்ளது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நீண்ட நாட்களாக இருந்து வந்தது.இதனால் புஷ்பா 2 படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்திருந்தனர். 


இதனையடுத்து படம் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பை அடுத்து  முன்பதிவில் 100 கோடி வசூல் செய்து புதிய சாதனையைப் படைத்துள்ளது புஷ்பா 2 திரைப்படம். இந்தப் பின்னணியில் நேற்று புஷ்பா 2 படத்தின் முதல் ஷோ வெளியானது. ஹைதராபாத் சந்தியா திரையரங்கிற்கு அல்லு அர்ஜுன்  வர இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து தியேட்டரில் மிகப் பெரிய அளவில் கூட்டம் கூடியது. 




முதல் ஷோ சிறப்பு காட்சியை காண அல்லு அர்ஜுன் வந்தபோது கூட்டத்தினர் முட்டி மோதினர். அந்த இடமே போர்க்களம் போல காணப்பட்டது. ஏராளமான ரசிகர்கள் ஒரே இடத்தில் ஒன்று திரண்டனர். இதனால் பாதுகாப்பு கருதி தடியடி நடத்தி போலீசார்  கூட்டத்தை கலைக்க முயன்றனர். அப்போது தனது  கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் படம் பார்க்க வந்திருந்த ரேவதி என்பவர் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டார். இதில் ரேவதியும், அவரது குழந்தை ஒன்றும் நெரிசலில் சிக்கி படுகாயமடைந்தனர். இதில் ரேவதி உயிரிழந்தார். குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த சிறுவனின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 


புஷ்பா 2 திரைப்படத்தை காண வந்த இடத்தில்  தாய்  உயிரிழந்து, மகன் கவலைக்கிடமாக உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்காமல் எப்படி இவ்வளவு கூட்டம் கூட காவல்துறை அனுமதித்தது என்பது பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.


இதுபோல ஆகி விடக் கூடாது என்பதற்காகத்தான் தமிழ்நாட்டில் அதிகாலைக் காட்சிகளுக்கு அரசு அனுமதி தருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு.. ஆர். அஸ்வின் திடீர் அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி!

news

அம்பேத்கரை எப்படியெல்லாம் காங்கிரஸ் அவமதித்தது?.. பட்டியலிட்ட பிரதமர் நரேந்திர மோடி!

news

அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

அமித்ஷா பேசியது பாஜகவிற்கு பின்விளைவுகளை ஏற்படுத்தும்.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

news

அடடா மழைடா அடை மழைடா.. சென்னை, புறநகர்களில் காலை முதல் விடாமல் கொட்டித் தீர்க்கும் மித மழை..!

news

அம்பேத்கர் அம்பேத்கர்.. உள்ளமும் உதடுகளும் மகிழ உச்சரித்துக் கொண்டே இருப்போம்.. தவெக விஜய்

news

Pongal.. சிறப்பு பொங்கல் தொகுப்பு விற்பனை.. இன்று முதல்.. ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில்!

news

புதுச்சேரியில்.. டிசம்பர் 28ம் தேதி பா.ம.க பொதுக்குழு கூட்டம்.. டாக்டர் அன்புமணி ராமதாஸ்

news

தென்னிந்தியர்கள் தேவையில்லை.. நொய்டா நிறுவனத்தின் அறிவிப்பால்.. கொந்தளிக்கும் சோசியல் மீடியா!

அதிகம் பார்க்கும் செய்திகள்