நெருங்கும் மழைக்காலம்.. இன்னும் முடியாத கால்வாய்ப் பணிகள்.. மக்கள் கடும் அதிருப்தி!

Sep 29, 2023,10:51 AM IST

சென்னை: வட கிழக்குப் பருவ மழை நெருங்கி விட்ட நிலையில் தற்போது அவ்வப்போது தொடர்ந்து கன மழை பெய்து வரும் நிலையில் சென்னையிலும், புறநகர்களிலும் கால்வாய்ப் பணிகள் பல இன்னும் முடிவடையாமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


செப்டம்பர் 30ம் தேதிக்குள் அனைத்துக் கால்வாய்ப் பணிகளையும் முடிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினும் கூட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார். ஆனால் பெரும்பாலான இடங்களில் இன்னும் 90 சதவீத அளவுக்கு பணிகள் முடியாத நிலைதான் காணப்படுகிறது.




சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் கால்வாய்ப் பணிகள் இன்னும் முழுமை அடையாமல் அப்பகுதி மக்களுக்கு பெரும் அசவுகரியங்களை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. பல இடங்களில் பள்ளம் தோண்டிய நிலையில் சாலைகளும் கூட சரிவர பராமரிப்பு இல்லாமல் உள்ளன.


குறிப்பாக புறநகர்ப் பகுதிகளில்தான் நிலைமை மோசமாக உள்ளது. தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் கால்வாய் போடும் பணிகள் நடந்து வருகின்றன. கூடவே சாலை போடும் பணிகளும் நடைபெறுகின்றன. ஆனால் பெரும்பாலான இடங்களில் இந்தப் பணிகள் இன்னும் முடிவடையாமல் அரைகுறையாகவே உள்ளன.




போடப்படும் சாலைகளும் கூட சரியில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன. பல இடங்களில் தார்ச்சாலைகள் புதிதாக போடப்பட்டும் கூட தண்ணீர் தேங்கி நிற்பதாக புகார்கள் எழுந்துள்ளன.


தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட செம்பாக்கம் பகுதியில், திருமலை நகர் பகுதியில் பிரதானசாலையில் மழை நீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகள் இன்னும் முழுமை அடையவில்லை. இந்தப் பகுதியில் ஏற்கனவே சாலைகள் மிகவும் மோசமாக இருந்து வந்தன. வருடக்கணக்கில் மோசமான சாலையில்தான் மக்கள் பயணித்து வந்தனர். இப்போது கால்வாய் அமைக்கும் பணிகளும் சேர்ந்து கொள்ளவே மக்கள் படாதபாடு பட்டு விட்டனர்.


தற்போது ஒரு பக்கத்தில் சாலை போடப்பட்டுள்ளது. ஆனால் கால்வாய் பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை. இந்த கால்வாய் அமைக்கும் பணியால் மழை நீர் வடிகால் சரியாக இல்லாமல், மழை நீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சாதாரண மழைக்கே தண்ணீர் வெள்ளம் போல தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில் புதிதாக போடப்பட்ட சாலைகள் சரியாக போடப்படாததால் மழை நீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சில தெருக்களில் கால்வாய் உயர்த்திப் போடப்பட்டுள்ளதால் அந்த தெருக்கள் பள்ளமாகியுள்ளன. இதனால் இங்கு சிறு மழைக்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது.




மழை நீர் மட்டும் தேங்கினால் பரவாயில்லை. கூடவே சாக்கடையும் தேங்கி மிகப் பெரும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் அபாயத்தை  உருவாக்குகின்றன. டெங்கு பரவக் கூடிய வகையில் வீடுகளில் தண்ணீர் தேங்கி நின்றால் கடும் அபராதம் விதிக்கப்படும் என்று அரசு சொல்கிறது. ஆனால் இப்படி சரியில்லாத ரோட்டைப் போட்டு வீடுகளில் மழை மற்றும் சாக்கடை நீர் தேங்கும் வகையிலான செயலை செய்தவர்களுக்கு என்ன அபராதம் போடுவது.. யார் அவர்களை தட்டிக் கேட்பது.


மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். அரசும், அதிகாரிகளும் துரித கதியில் இதைச் சரி செய்வது.  இன்னும் வட கிழக்குப் பருவ மழை தொடங்கி விட்டால் சென்னை மற்றும் புறநகர்களின் பெரும்பாலான பகுதிகளில் பெரும் பாதிப்பு வரும் என்று அஞ்சப்படுகிறது. அரசு தலையிட்டு போர்க்கால வேகத்தில் நடவடிக்கைகளை எடுக்க துரிதப்படுத்தினால் நல்லது.

சமீபத்திய செய்திகள்

news

மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. ஜார்க்கண்ட் ஆட்சியை தக்க வைத்தது ஜேஎம்எம் காங் கூட்டணி

news

வங்ககடலில் உருவானது.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் மிக கன மழைக்கு வாய்ப்பிருக்கா?

news

வளர்ச்சிக்கும், நல்லாட்சிக்கும் கிடைத்த பெரும் வெற்றி .. மகாராஷ்டிரா மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி

news

Priyanka Gandhi.. வயநாடு இடைத் தேர்தலில் பிரியங்கா காந்தி அதிரடி.. அண்ணன் சாதனையை முறியடித்த தங்கை!

news

14 மாநிலங்கள்.. 48 சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தல்.. பாஜக 18, காங்கிரஸ் 8, திரினமூலுக்கு 6!

news

மகாராஷ்டிரா வெற்றி.. வரிந்து கட்டிக்கொண்டு பட்டாசு வெடித்த தமிழிசை.. அடுத்து சொன்ன அதிரடி வார்த்தை!

news

Wayanad by poll resutls.. அபார வெற்றியை நோக்கி பிரியங்கா காந்தி.. 3.20 லட்சம் வாக்குகள் வித்தியாசம்!

news

Maharashtra poll results: உத்தவ், சரத் பவாருக்கு கெட் அவுட் சொன்ன ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவார்!

news

Wayanad: வயநாட்டில் கொடி நாட்டிய பிரியங்கா காந்தி.. 4வது தலைமுறையிலிருந்து மேலும் ஒரு எம்.பி

அதிகம் பார்க்கும் செய்திகள்