கோலாலம்பூர்: மலேசியாவில் கடற்படை தினக் கொண்டாட்டத்திற்கான ஒத்திகையில் ஈடுபட்ட ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒன்றுக்கொன்று மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியாவில் ஒவ்வொரு வருடமும் கடற்படை தினம் அனுசரிக்கப்படும். இந்த தினத்தில் ஹெலிகாப்டர்கள், ராணுவ விமானங்களின், சாகச நிகழ்ச்சிகள் நடைபெறும். இதற்காக கடற்படையினர் உள்ளிட்ட முப்பைடயினரும் வருடா வருடம் பயிற்சிகள் மேற்கொள்வர். இதனைக் காண ஆயிரக்கணக்கானோர் வருவார்கள்.
அந்த வகையில் இந்த வருடம் மலேசியாவில் வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி கடற்படை தினம் கொண்டாடப்பட உள்ளது. இது 90 ஆவது கடற்படை தினமாகும். இதையெட்டி ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களில் கடற்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ராணுவ வீரர்கள், கடற்படை வீரர்கள் ஆகியோர் கடந்த சில தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இதில் ஐந்திற்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் பங்கேற்று இருந்தது.
முதற்கட்டமாக கடற்படையினரின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. இதில் ஹச்.ஓ.எம் ரக ஹெலிகாப்டரில் ஏழு பேரும், ஃபென்னக் ரக ஹெலிகாப்டரில் மூன்று பேரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது எதிர்ப்பாராதவிதமாக திடீரென ஹெலிகாப்டர்கள் இரண்டும் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டன. மோதிக்கொண்ட ஹெலிகாப்யர்கள் தரையில் விழுந்து அப்பளம் போல் நொறுங்கின. இதில் ஹெலிகாப்டர்களில் இருந்த 10 கடற்படை வீரர்கள் உயிரிழந்தனர்.
ஒத்திகையை காண அப்பகுதியில் கடற்படை வீரர்களின் குடும்பத்தினர், பொதுமக்கள், என ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் கூடியிருந்தனர். நல்ல வேலையாக ஆளில்லாத இடத்தில் விமானம் விழுந்து விபத்திற்கு உள்ளானது. இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!
மாற்றுத்திறனாளிகள் குறித்த சர்ச்சை பேச்சு...வருத்தம் தெரிவித்த அமைச்சர் துரைமுருகன்
காங்கிரஸ் கம்யூனிஸ்ட்டை கண்டித்து.. தீர்மானங்களை கொண்டு வாங்க பார்ப்போம்..எடப்பாடி பழனிச்சாமி சவால்
அமித்ஷா பிரஸ்மீட் மேடையில் திடீர் Change.. டிஜிட்டல் பேனரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெயர் நீக்கம்
திமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து பொன்முடி நீக்கம்... புதிதாக திருச்சி சிவா நியமனம்!
அமித்ஷாவை சந்திக்கும் அதிமுக தலைவர்கள்.. தேமுதிகவுக்கு டைம் கொடுக்க மறுத்ததா பாஜக?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 11, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
கலக்கும் குட் பேட் அக்லி.. புஷ்பா பட இயக்குனர் சுகுமார் படத்தில் அஜித் நடிப்பாரா..?
Panguni Utthiram.. பங்குனி உத்திரம் இன்று.. 12ம் தேதி முழு நிலவு.. மிக மிக சிறப்பு!
{{comments.comment}}