"ஆப்"க்கு சூப்பர் வரவேற்பு.. இதுவரை 50 லட்சம் + உறுப்பினர்கள் சேர்ந்துட்டாங்களாம்.. அசத்தும் தவெக!

Mar 11, 2024,06:13 PM IST

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலியை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்து வைத்து சில நாட்களே ஆகியுள்ள நிலையில் இதுவரை 50 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் செயலி மூலமாக கட்சியில் சேர்ந்துள்ளார்களாம்.


கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் நடிகர் விஜய். 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை எதிர் நோக்கியே தனது இலக்கு என்ற நோக்கில் தனது அரசியல் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.  தற்போது படிப்படியாக ஒவ்வொரு வேலையாக செய்து வருகின்றனர்.




லேட்டஸ்டாக அவர்கள் மேற்கொண்டுள்ள முக்கியப் பணி என்றால் அது உறுப்பினர் சேர்க்கைதான். 2 கோடி பேரை உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்று விஜய் இலக்கு நிர்ணயித்துள்ளார். இதற்காக ஒரு செயலியை உருவாக்கியுள்ளனர். அதில் முதல் உறுப்பினராக விஜய் சேர்ந்தார். இதைத் தொடர்ந்து தொண்டர்கள் அதில் இணைந்து வருகின்றனர்.


இதற்காக வாட்ஸ் அப், டெலிகிராம், ட்விட்டர் உள்ளிட்ட வைக்கு தனித்தனியான க்யூ ஆர் குறியீடை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் உறுப்பினர் சேர்க்கையை பதிவு செய்து கொள்ள புதிய செயலியைப் பயன்படுத்தி கட்சியினர் இணைந்து வருகின்றனர்.  செயலி அறிமுகப்படுத்தப்பட்டபோது பல லட்சம் பேர் ஒரே  சமயத்தில் அதில் இணைய ஆர்வம் காட்டியதால் சர்வர் டவுன் ஆனது. தற்போது அது சரி செய்யப்பட்டு தொண்டர்கள் எளிதாக இணைந்து வருகின்றனர்.


இதுவரை 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த செயலி மூலம் தவெக உறுப்பினராக இணைந்துள்ளனராம். நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம். இவரை பிடிக்காதவர் யாரும் இருக்க முடியாது. குழந்தை முதல் பெரியவர் வரை அனைவரும் நடிகர் விஜயின் தீவிர ரசிகர்கள். ஒரு நண்பனாக, மகனாக, தந்தையாக, நடிகர் விஜயின் நடிப்பை திரையில் ரசித்து வருவதால் அவருக்கு  ரசிகர் பட்டாளம் அதிகம் என்றே சொல்லலாம். குறிப்பாக நடிகர் விஜயை ஆதரிக்கும் பெண் ரசிகர்கள் மற்றும் குழந்தை ரசிகர்கள் அதிகம்.


தற்போது கமல்ஹாசனும் திமுக அணியில் இணைந்து விட்டார். இதன் மூலம் அவரது தனி அடையாளம் மறைந்து விட்டது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பெரிய ஸ்டார்கள் யாரும் அரசியலில் இல்லை. திமுக மட்டுமே வலுவாக இருக்கிறது. எனவே வருகிற சட்டசபைத் தேர்தலில் திமுகவுக்கு கடும் போட்டியைக் கொடுக்கக் கூடிய அளவில் விஜய்யின் கட்சி உருவெடுக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்