தீபாவளி திருநாளையொட்டி.. அயோத்தியில் 25 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி.. புதிய உலக சாதனை!

Oct 31, 2024,10:49 AM IST

அயோத்தி: அயோத்தியில் தீபாவளித் திருநாளையொட்டி 25 லட்சத்திற்கும் மேற்பட்ட விளக்குகள் ஏற்றி புதிய உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.  சரயு நதிக்கரையில் இந்த விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டிருந்தன. 


முன்னதாக 28 லட்சம் விளக்குகளை ஏற்ற முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும் 25 லட்சத்து 12 ஆயிரத்து 585 விளக்குகளே ஏற்ற முடிந்தது. இதுவே உலக சாதனைதான்.


இந்தியா தவிர மியான்மர், நேபாளம், தாய்லாந்து, மலேசியா, கம்போடியா, இந்தோனேசியா நாடுகளைச் சேர்ந்த பலரும் இந்த விளக்கேற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பல்வேறு கலை, கலாச்சார நிகழ்ச்சிகளுக்கும் இந்த விழாவின்போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இதுதவிர ராம் லீலாவும் உத்தரகாண்ட் மாநிலக் கலைஞர்கள் சார்பில் நடத்தப்பட்டது. 




முன்னதாக  அலங்கார தேர் பவனியையும் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். விளக்கேற்றும் நிகழ்ச்சியை வருடா வருடம் தீபோத்சவ் என்ற பெயரில் உத்தரப் பிரதேச அரசு கொண்டாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதையொட்டி அலங்கார ரதங்களும் பவனி வரும். இந்த முறை சுற்றுலாத்துறை மூலம் ராமாயானத்தை விளக்கும் அலங்கார ரதங்கள் வடிவமைக்கப்பட்டு பவனி வந்தன. 11க்கும் மேற்பட்ட தேர்கள் பவனி வந்தன.


அயோத்தியில் ராமர் கோவில் வந்த பிறகு நடைபெறும் முதல் தீபோத்சவ் விழா என்பதால் இந்த விழா இந்த முறை பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!

news

அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!

news

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி

news

கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!

news

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!

news

மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!

news

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!

news

எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!

news

அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்