சென்னை: மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து வெளியான வதந்திகள் அனைத்தும் பொய்யானவை என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் படம் ரிலீஸ் ஆகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மூக்குத்தி அம்மன் பாகம் 2 படத்தை இயக்க இருப்பதாக படக்குழு அறிவிப்பை வெளியிட்டது. அதேபோல் மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடிகை நயன்தாரா வலம் வர இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
வேல்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் மூக்குத்தியம்மன் இரண்டாம் பாகத்தை இயக்குனர் சுந்தர்.சி இயக்குகிறார். இப்படத்தின் பூஜை விழா கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் இயக்குனர் சுந்தர்.சி, நடிகைகள் நயன்தாரா, மீனா, குஷ்பூ, ரெஜினா, யோகி பாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது மிகப் பெரிய அம்மன் சூலாயுதத்தை குஷ்பு வழங்க நயன்தாரா பெற்றுக் கொண்டார். இது தொடர்பான புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரலாகியது.
இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் தொடங்கியது. அப்போது நயன்தாராவுக்கும் இயக்குனர் சுந்தர்.சி க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இதனால் இப்படத்தில் நயன்தாராவிற்கு பதிலாக தமன்னா நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், இதை மறுத்து நடிகை குஷ்பு தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மூக்குத்தி அம்மன் 2 பற்றி பல தேவையற்ற வதந்திகள் இணையத்தில் உலவி வருகின்றன. அது உண்மையில்லை. படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது. சுந்தர் சி எப்படிப்பட்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். நயன்தாராவும் தனது மதிப்பை நிரூபித்துள்ளார். முதல் பாகத்தில் அவர் நடித்த கதாபாத்திரத்தில் மீண்டும் அவர் நடிப்பது மகிழ்ச்சி. சுந்தர்.சியிடம் இருந்து மற்றுமொரு ப்ளாக்பஸ்டர் திரைப்படத்திற்காக காத்திருங்கள். இணையத்தில் பரவும் இந்த வதந்திகள் திருஷ்டி எடுத்த மாதிரி. நடப்பதெல்லாம் நன்மைக்கே. உங்களின் ஆசிர்வாதம் மற்றும் அன்பை மட்டுமே நாங்கள் நம்புகிறோம் என பதிவிட்டுள்ளார்.
வக்பு வாரிய சட்ட மசோதா நாளை தாக்கல்.. எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி எம்.பிக்கள் முடிவு
தமிழ்நாட்டில் வெப்பநிலை படிப்படியாக ..2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்..!
வழக்கத்தைவிட.. ஏப்ரல், ஜூனில் வெப்பம் அதிகரிக்கும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..!
Emburan Movie: பெரியாறு அணை குறித்து அவதூறு கருத்துகளை நீக்குக.. பண்ருட்டி வேல்முருகன்..!
Madurai Chithirai Thiruvizha 2025: மீனாட்சி அம்மன் கோவிலில்..ஏப்ரல் 29ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்..
அருவறுப்பான ஆண்களே அழிஞ்சு நாசமா போங்க.. பாடகி சின்மயி ஆவேசம்!
கும்பகோணம் வெற்றிலைக்கும் தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு!
டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு.. ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம்.. வெளியானது அரசு உத்தரவு..!
தமிழகத்தில் ஆட்சி அமைப்போம்.. அமித்ஷா கூறியது நகைச்சுவை:விசிக தலைவர் திருமாவளவன்!
{{comments.comment}}