உங்களில் யார் சிறந்த  "சும்மா".. இப்படியும் ஒரு போட்டி.. எங்கன்னு பாருங்க!

Sep 14, 2023,04:45 PM IST
மான்டிநீக்ரோ: சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம்னு சும்மா போற போக்குல ஒரு படத்துல வடிவேலு காமெடி பண்ணியிருப்பார்.. இதையே மான்டிநீக்ரோ நாட்டில் ஒரு போட்டியாகவே வைத்து பட்டையைக் கிளப்பிக் கொண்டுள்ளனர்.

இது சும்மா போட்டி இல்லை பாஸ்.. சும்மாவே படுத்துக் கிடக்கணும்.. அதுதான் போட்டி.. யார் அதிக நேரம் சும்மாவே படுத்துக் கிடக்கிறார்களோ.. அவர்களே வின்னர்.. இந்த சும்மா போட்டியை சும்மா நடத்தவில்லை.. மாறாக சிறந்த "சும்மா"வுக்கு பரிசும் அளிப்பார்களாம்.



தென் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள குட்டி நாடுதான் மான்டிநீக்ரோ இங்குதான் உலகின் சிறந்த சோம்பேறியைக் கண்டுபிடிப்பதற்கான போட்டியை நடத்துகிறார்கள். பிக் பாஸ் போட்டியில் இருப்பது போல ஒரு பெரிய வீடு. அந்த வீட்டில் படுக்கைகள் போடப்பட்டிருக்கும். அதில் போய்ப் போட்டியாளர்கள் படுத்துக் கொள்ள வேண்டும்.

எந்த வேலையும் செய்யக் கூடாது.. சாப்பாடு உள்பட எல்லாமே படுக்கைக்கே வந்து விடும். யார் கடைசி வரை சும்மாவே படுத்திருந்து பொறுமையாக இருக்கிறார்களோ அவர்களே சிறந்த சோம்பேறியாக தேர்வு செய்யப்பட்டு பரிசு தரப்படும்.

தற்போது 7 போட்டியாளர்கள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டு படுத்துக் கிடக்கின்றனர்.  வடக்கு மான்டிநீக்ரோவில் உள்ள ரிசார்ட்டில் இந்தப் போட்டியை நடத்தி வருகின்றனர். 20வது நாளாக போட்டி தொடர்ந்து வருகிறது.  இதுவரை 463 மணி நேரம் கடந்து விட்டது. போட்டி விதிமுறை என்னவென்றால் வெறுமே படுத்திருக்க வேண்டும். உட்காரக் கூடாது, நிற்கக் கூடாது.  அப்படிச் செய்தால் உடனே டிஸ்மிஸ் செய்து விடுவார்கள்.



8 மணி நேரத்திற்கு ஒருமுறை டாய்லெட் போய்க் கொள்ளலாம். படுத்தபடியே லேப்டாப் பார்க்கலாம். செல்போன் பார்த்துக் கொள்ளவும் அனுமதி உண்டு. அனைத்துப் போட்டியாளர்களும் நல்ல உடல்  நலத்துடன் இருக்கிறார்களாம். சூப்பராக பீல் பண்ணுகிறார்களாம். சும்மாவே படுத்துக் கிடப்பது கஷ்டம்தான் என்றும் சிரித்தபடி சொல்கிறார்களாம். 12 வருடங்களுக்கு முன்புதான் இந்த சோம்பேறி போட்டி நடைபெற்றது.  பிற ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள், மான்டிநீக்ரோ நாட்டவரை பேசிக்கலி சோம்பேறிகள் என்று கிண்டலாக சொல்வது வழக்கம். அதை கேலி செய்யும் வகையில்தான் இந்த சாம்பியன் போட்டியைக் கொண்டு வந்து சீரியஸாக நடத்திக் கொண்டுள்ளனர்.

இந்த ரிசார்ட்டின் உரிமையாளரான ரடோன்ஜா பிளகோஜோவிக் என்ற பெண்மணிதான் இந்த போட்டியை வருடா வருடம் நடத்தி வருகிறார். இந்தப் போட்யில் வெல்வோருக்கு இந்திய மதிப்பில் ரூ. 80,000 வரை பரிசாக கிடைக்கும்.

சமீபத்திய செய்திகள்

news

தவெக மாநாடு.. அரை மணி நேரம், ஒரு மணி நேரம் இல்லை நண்பா.. 2 மணி நேரம் பேசப் போறாராம் விஜய்!

news

தேவர் ஜெயந்தி, மருதுபாண்டியர் நினைவு தினம்.. மதுரையில் 3 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடல்!

news

கந்த சஷ்டி விரதம் 2024 : கோவிலுக்குப் போகாமல்.. வீட்டிலேயே எளிமையாக விரதம் இருக்கும் முறை

news

கோர்ட்டுக்கு போகாமலேயே இனி விவாகரத்து வாங்கலாம்... சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

news

கந்தசஷ்டி விழா 2024.. திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குப் போகும்.. பக்தர்களுக்கு அறைகள் ரெடி!

news

மாமா மாமா உன்னைத்தானே.. திண்ணையில் அமர்ந்து கீரை ஆய்ந்தபடி.. அசத்தலாக பாடும் பெண்!

news

35 வருஷமாக.. ஆனால் முதல் முறையாக இப்போது எனக்காக பிரச்சாரம் செய்கிறேன்.. பிரியங்கா காந்தி

news

வயநாடு இடைத்தேர்தல்.. ஆயிரக்கணக்கானோருடன் பேரணி.. பிரியங்கா காந்தி வேட்பு மனு தாக்கல்

news

சுவையான கொங்கு நாட்டு நெல்லிக்காய் தொக்கு.. சூப்பரா இருக்கும்.. செஞ்சு பாக்கலாமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்