சென்னை: நடிகர் மோகன்லால் இயக்குனராக அவதாரம் எடுத்து இயக்கிய பரோஸ் திரைப்படத்தின் தமிழ் ட்ரெய்லர் வரும் டிசம்பர் 15ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 25ஆம் தேதி உலகம் முழுவதும் இப்படம் வெளியாகிறது.
மலையாளத் திரை உலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் மோகன்லால். இவர் மலையாள மொழியில் இதுவரை நானூறு க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிகருக்கான பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ், கன்னடம்,ஹிந்தி, தெலுங்கு என பல்வேறு மொழிகளிலும் நடித்து அசத்தியுள்ளார்.
கேரளாவை தாண்டி தமிழ்நாட்டிலும் மோகன்லாலுக்கு நிறைய ரசிகர் பட்டாளம் உண்டு. நடிகர் மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், பின்னணி பாடகர் என பன்முகத் திறமைகள் கொண்ட கலைஞராக விளங்கிய மோகன்லால் தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். மோகன்லால் முதன்முதலாக இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் தான் பரோஸ்.
இப்படம் 3d பிரம்மாண்ட பேண்டஸி திரைப்படமாக உருவாகியுள்ள நிலையில் இப்படத்தை ஆசிர்வாத் சினிமா சார்பில் ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ளார். இத் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே மோகன்லால் கூட்டணியில் இதுவரை 28 படங்களுக்கு மேல் வெளியாகி அப்படங்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது கூட்டணியில் மீண்டும் பிரம்மாண்ட படைப்பாக பரோஸ் திரைப்படம் உருவாகி இருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் மார்க் க்ளியான் இப்படத்திற்கு ரீ ரிக்கார்டிங் செய்ய இளம் வயதிலேயே உலகப் புகழ் பெற்ற லிடியன் நாதஸ்வரம் இசையமைத்துள்ளார். இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பரோஸ் என்னும் பூதத்திற்கும் ஒரு பெண் குழந்தைக்கும் உள்ள உறவை பேண்டஸி கலந்து அனைவரும் ரசிக்கும் வகையில் மிக பிரம்மாண்ட படைப்பாக மோகன்லால் இயக்கிய பரோஸ் திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், என ஐந்து மொழிகளில் வெளியாக தயாராகி வருகிறது.
இந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படத்தின் தமிழ் ட்ரெய்லர் வரும் டிசம்பர் 15ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் டிசம்பர் 25ஆம் தேதி உலகம் முழுவதும் பான் இந்தியா படமாக பரோஸ் திரைப்படம் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மோகன்லால் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி
விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு
யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!
பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா
என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!
இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!
தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?
அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!
தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்
{{comments.comment}}