செம்ம செம்ம ஷமி.. 24 விக்கெட்களைத் தொட்டு.. மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார்!

Nov 19, 2023,09:52 PM IST

அகமதாபாத்: முகம்மது ஷமி மீண்டும் ஒரு முறை இந்தியாவுக்கு நம்பிக்கையூட்டியுள்ளார். ஆஸ்திரேலியாவின் அதிரடியான பேட்டிங்குக்கு கடிவாளம் போட்டு மட்டுப்படுத்திய அவர் கூடவே 24வது விக்கெட்டையும் வீழ்த்தி இந்தத் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.


இந்திய அணிக்கு சூப்பர் பலமாக மாறியுள்ள முகம்மது ஷமி இந்த உலகக் கோப்பைத் தொடரில் அதிரடியான பவுலிங்கை வெளிப்படுத்தி வருகிறார். அவரது புயல் வேகப் பந்து வீச்சில்  எதிரணிகள் தட்டுத் தடுமாறியதை கண்டு வருகிறோம்.


இன்றைய ஆஸ்திரேலிய பேட்டிங்கிநன்போதும் முகம்மது ஷமிதான் இந்தியாவுக்கு முதல் விக்கெட்டைப் பெற்றுக் கொடுத்தார். அதி வேகமாக போய்க் கொண்டிருந்த ஆஸ்திரேலிய பேட்டிங்கை அப்படியே மட்டுப்படுத்தியவர் ஷமிதான்.




அதி வேகம் காட்டி வந்த டேவிட் வார்னரை தனது அபாரமான பந்து வீச்சால் வீழ்த்தி தனது முதல் விக்கெட்டை இன்று பெற்றார் முகம்மது ஷமி. இந்தத் தொடரில் அவருக்கு இது 24வது விக்கெட்டாகும். இதன் மூலம் அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர்கள் வரிசையில் முதலிடத்தைப் பிடித்தார் ஷமி.


இறுதிப் போட்டிக்கு முன்பு வரை ஷமிதான் முதலிடத்தில் இருந்தார். ஆனால் இன்று ஆஸ்திரேலியா பவுலிங் செய்தபோது ஆடம் ஸாம்பா 23 விக்கெட் வீழ்த்தி ஷமியை சமன் செய்தார். ஆனால் தற்போது ஷமி மேலே வந்து விட்டார். இதன் மூலம் இந்தத் தொடரில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியவராக ஷமி உருவெடுத்துள்ளார். அவருக்கு தங்கப் பந்து பரிசு கிடைப்பதும் உறுதியாகி விட்டது.


நடப்புத் தொடரில் ஒரு போட்டியில் அதிகபட்சமாக நியூசிலாந்துக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் ஷமி 7 விக்கெட் வீழ்த்தியதே இந்தத் தொடரில் அதிகபட்ச தனிப்பட்ட சிறப்பான பந்து வீச்சு என்பது குறிப்பிடத்தக்கது.


சமீபத்திய செய்திகள்

news

'இட்லி கடை' பிரியர்களே.. ஹேப்பி நியூஸ் .. அக்டோபர் 1ம் தேதி திரைக்கு வருகிறார் தனுஷ்!

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!

news

தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்