மும்பை: டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவை தான் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாக வெளியான செய்திகளுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளர் முகம்மது ஷமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற வதந்திகளைப் பரப்புவோருக்கும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து பேச்சாளராக திகழ்பவர் முகமது ஷமி. கடந்த 2023 உலகக்கோப்பை போட்டி தொடரின் போது இவரது பந்துவீச்சு மிகச் சிறப்பாக இருந்தது. இருப்பினும் துரதிஷ்டவசமாக இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வியுற்று கோப்பையை தட்டிச் செல்ல தவறியது. முகமது ஷமி பல்வேறு நெருக்கடியான காலகட்டங்களில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு பல முக்கிய வெற்றிகளைத் தேடிக் கொடுத்த முன்னணி பந்துவீச்சாளர்.
இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. அவரது முதல் மனைவி பெயர் ஹசின் ஜவஹான். இருவரும் பிரச்சினை ஏற்பட்டு பிரிந்து போய் விட்டனர். இந்த நிலையில் இவரையும் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவையும் சேர்த்து வைத்து வதந்திகள் பரவி வருகின்றன. ஹைதராபாதைச் சேர்ந்த சானியா மிர்சா இந்திய டென்னிஸ் உலகின் மிகச்சிறந்த வீராங்கனைகளில் ஒருவர். நட்சத்திர வீராங்கனையாக பல காலம் வலம் வந்தவர். பல சாதனைகளைப் படைத்தவர். பல கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் வென்றவர்.
பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டு அவர் மூலமாக ஒரு குழந்தையும் உள்ளது. இருப்பினும் சில மாதங்களுக்கு முன் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். சோயப் மாலிக், வேறு ஒரு நடிகையுடன் தொடர்பில் இருந்ததால் கோபமடைந்த சானியா மிர்ஸா, கணவரை விவாகரத்து செய்து விட்டு பிரிந்து விட்டார். சோயப் மாலிக் தான் காதலித்து வந்த நடிகையை தற்போது திருமணம் செய்து கொண்டு தனது 2வது இன்னிங்ஸைத் தொடர்கிறார்.
இந்த நிலையில் சானியா மிர்சாவையும் ஷமியையும் சேர்த்து வைத்து வரும் தகவல்கள் பலரையும் அதிர்ச்சியும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தற்போது முகமது ஷமி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், இது போன்ற பொய்களை பரப்புவோர் தயவு செய்து அதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இது மாதிரியான செயல்கள் மிகவும் கொடுமையானவை, பலரையும் பாதிக்க கூடியவை. எனவே இது மாதிரியான பொறுப்பற்ற செயல்களில் ஈடுபடுவோர் தயவு செய்து அதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இது மிகவும் வினோதமாக உள்ளது. வேண்டுமென்று செய்வது போல தெரிகிறது. இதனால் என்ன லாபம் உங்களுக்கு கிடைத்து விடப்போகிறது. எனது போனை திறந்தால் ஏதாவது ஒரு மீம்ஸ் வந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் வேடிக்கைக்காக செய்யப்படும் மீம்ஸ்கள் வேறு, விபரீதமான இந்த மாதிரியான புத்தியுடன் செய்யப்படும் மீம்ஸ்கள் வேறு. இது ஒருவருடைய வாழ்க்கையை பாதிக்கும். எனவே இதை செய்வதற்கு முன் அது யாரையும் பாதிக்கிறதா என்பதை சிந்தித்துக் கொள்ளுங்கள். பாதிக்கும் என்று தெரிந்தால் தயவு செய்து அதில் ஈடுபடாதீர்கள்.
இது மாதிரியான மனிதர்கள் நிச்சயம் ஒதுக்கப்பட வேண்டியவர்கள். உங்களுக்கு தைரியம் இருந்தால் ஒரு வெரிஃபைட் பேஜிலிருந்து பண்ணுங்க, அதற்கு நான் பதிலளிப்பேன். மற்றவற்றுக்கு என்னால் பதில் அளிக்க முடியாது. வாழ்க்கையில் வெற்றி பெற முயலுங்கள், மற்றவருக்கு உதவுங்கள், உங்களை நீங்களே மேம்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் ஒரு நல்ல மனிதர் என்பதை முதலில் நீங்கள் நம்ப முயற்சி செய்யுங்கள், அப்போதுதான் நீங்கள் நல்ல மனிதராக திகழ முடியும் என்று ஷமி கூறியுள்ளார்.
சென்னை மக்களே.. ரெடியா.. 12ம் தேதி முதல் கன மழை வெளுக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் தந்த அலர்ட்!
அண்ணாமலைக்குப் பின்னாடி.. விஜய்க்கு சீமான் கொடுத்த இடம்.. அந்த அன்புத்தம்பிதான் ஹைலைட்டே!
தவெக விஜய்க்கு பின்னால் இருக்கும் விஐபி யார்?.. பரபரக்கும் அரசியல் களம்.. அட, இவர் தானாமே!!
Delhi Ganesh.. 400க்கும் மேற்பட்ட படங்கள்.. ஹீரோ டு காமெடியன்.. மறக்க முடியாத டெல்லி கணேஷ்
நவம்பர் 10 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
விருச்சிக ராசிக்காரர்களே.. மகிழ்ச்சியான செய்திகள் வீடு தேடி வரும் நாள்
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்.. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ரிப்பன் மாளிகையை சுற்றிப் பார்க்க அரிய வாய்ப்பு
2028 அதிபர் தேர்தலுக்குத் தயாராகப் போகிறாரா கமலா ஹாரிஸ்.. அடுத்த திட்டம் என்ன?
நவ. 14, 15 கன மழை எச்சரிக்கை.. சென்னையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்.. மேயர்பிரியா அப்டேட்!
{{comments.comment}}