டெல்லி: 2023ம் ஆண்டுக்கான அர்ஜூனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலிக்கு அர்ஜூனா விருதும், செஸ் பயிற்சியாளர் ஆர்.பி. ரமேஷுக்கு துரோணாச்சார்யா விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் கபடி சாம்பியன் இ. பாஸ்கரன் மற்றும் கவிதா செல்வராஜ் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரர் முகம்மது ஷமி உள்பட மொத்தம் 26 வீரர் வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது சிராக் சந்திரசேகர் ஷெட்டி மற்றும் ரங்கிரெட்டி சாத்விக் சாய் ராஜ் ஆகியோருக்கு அளிக்கப்படும்.
ஜனவரி 9ம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் விருதுகள் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அர்ஜூனா விருது பெறுவோர் பட்டியல் (26 பேர்):
ஓஜாஸ் பிரவீன் தியோதலே, அதிதி கோபிசந்த் ஸ்வாமி, ஸ்ரீசஹ்கர், பாருல் செளத்ரி, முமக்மது ஹுஸ்ஸமுதின், வைஷாலி, முகம்மது ஷமி, அனுஷ் அகர்வாலா, திவ்யகிருத்தி சிங், தீக்ஷா தாகர், கிருஷ்ணன் பகதூர் பதக், புக்ரம்பம் சுசீலா சானு, பவன் குமார், ரித்து நேகி, நஸ்ரீன், பிங்கி, ஐஸ்வர்யா பிரதாப் சிங் டோமர், ஈஷா சிங், ஹரீந்தர் பால், ஆயிகா முகர்ஜி, சுனில் குமார், ஆன்டிம், நவோரம் ரோஷிபினா தேவி, ஷீத்தல் தேவி, இல்லூரி அஜய் குமார் ரெட்டி, பிராச்சி யாதவ்.
துரோணாச்சார்யா விருதுகள் (5 பேர்)
லலித் குமார்
ஆர்பி ரமேஷ்
மகாவீர் பிரசாத் சைனி
சிவேந்திரா சிங்
கணேஷ் பிரபாகர் தேவ்ருக்கர்
வாழ்நாள் சாதனையாளர் விருது
ஜஸ்கிரத் சிங் கிரேவால்
இ பாஸ்கரன்
ஜெயந்த குமார் புஷிலால்
தியான் சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருது
மஞ்சுஷா கன்வார்
வினீத் குமார் சர்மா
கவிதா செல்வராஜ்
மவுலானா அபுல் கலாம் ஆசாத் கோப்பை 2023:
குருநானக் தேவ் பல்கலைக்கழகம், அமிர்தசரஸ் - முதல் பரிசு
லவ்லி புரபஷனல் பல்கலைக்கழகம், பஞ்சாப் - முதல் ரன்னர் அப்
குருஷேத்திரா பல்கலைக்கழகம், குருஷேத்திரா - 2வது ரன்னர் அப்
காற்று சுழற்சி காரணமாக.. தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் ஏப்ரல் 28 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு..!
போப் ஆண்டவர் பிரான்சிஸ் மறைவையொட்டி.. மூன்று நாட்கள் துக்கம் அனுசரிப்பு.. மத்திய அரசு!
பாரதிதாசன் பிறந்த நாள்... ஒரு வாரத்திற்கு தமிழ் வார விழா கொண்டாட்டம்... முதல்வர் மு.க.ஸ்டாலின்!
சனம் ஷெட்டிக்கு ஒரு குழப்பம்.. நிறைய ஆபர் வருதாம்.. நீங்க ஆலோசனை சொல்லுங்களேன்!
எடப்பாடி பழனிச்சாமி, நயினார் நாகேந்திரன் திடீர் ஆலோசனைக் கூட்டம்.. என்னவாக இருக்கும்..?
100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!
ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்பாடு செய்துள்ள துணைவேந்தர்கள் மாநாடு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
நகையைப் போட்டா.. பதிலுக்கு பணம் வரும்.. சீனாவில் அறிமுகமான கோல்ட் ஏடிஎம்.. சூப்பர்ல!
Today gold price: இதுக்கு ஒரு என்டு கார்டே இல்லையா... 1 கிராம் ரூ.10,000த்தை நெருங்கும் தங்கம் விலை!
{{comments.comment}}