"மொத்தம் 14 மாப்பிள்ளைங்க.. இப்ப நான் என்ன பண்ண".. பெண்ணுக்கு வந்த குழப்பம்!!

Jul 20, 2023,01:20 PM IST
- பூஜா

சென்னை: 14 மாப்பிள்ளை இருக்கு.. இதுல இருந்து யாரை தேர்வு செய்ய .. ஒரே குழப்பமா இருக்கு.. யாராவது ஹெல்ப் பண்ணுங்களேன் என்று ஒரு பெண் போட்ட டிவீட் செம பரபரப்பாக ஓடிக் கொண்டுள்ளது.

ட்விட்டரில் விந்தையான பதிவுகளுக்கும் அதை சுற்றி சுவாரஸ்யமான உரையாடல்களுக்கும் பஞ்சமே இருக்காது. சில டிவீட்டுகள் படு வேகமாக வைரலாகி விடும். காரணம், அந்த டிவீட்டுகளில் இருக்கும் மேட்டர். அந்த வகையில் கணவராக யாரை தேர்ந்தெடுக்கப்பது என்று குழப்பமடைந்து ஒரு பெண் போட்ட டிவீட் பரபரப்பாகியுள்ளது.



தான் யார் என்பதை அடையாளம் காட்டிக் கொள்ளாத அந்தப் பெண்ணுக்கு 29 வயதாகிறது. சமீபத்தில் அவர் ஒரு டிவீட் போட்டிருந்தார்.  அதில், 29 வயதாகும் நான் பி.காம் படித்துள்ளேன். இப்போது 14 பேருடன் மேட்ரிமோனி மூலமாக பேசிக் கொண்டிருக்கிறேன். இப்போது அதிலிருந்து யாரைத் தேர்வு செய்வது என்பது குழப்பமாக உள்ளது என்று கூறி அந்த 14 பேரின் பட்டியலையும் இணைத்துள்ளார்.

அந்த 14 பேரில் இடம் பெற்றுள்ள மாப்பிள்ளைகளில் குறைந்தபட்ச வயது 29 ஆகும். அதிகபட்சம் 35 வயதுக்காரர் ஒருவர் இருக்கிறார். குறைந்தபட்ச ஆண்டு வருமானம் ரூ. 14 லட்சமாகும்.  அதிகபட்சம் ரூ. 45 லட்சம் ஆகும். அவர் பிசிஜி நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். பெரும்பாலான மாப்பிள்ளைகள் பெங்களூரில் வேலை பார்ப்பவர்களாக உள்ளனர். அதாவது 5 பேர் பெங்களூரில் வேலை பார்க்கிறார்கள். மற்றவர்கள் மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா, புவனேஸ்வர், டெல்லி, புனே ஆகிய இடங்களில் வேலை பார்க்கிறார்களாம்.

அந்தப் பெண்ணின் இந்த பதிவின் ஸ்கிரீன் ஷாட் ட்விட்டரில் வைரலாகி , 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. இதைப் பார்த்தவர்கள் அவரைக் கட்டிக்கங்க, இவரைக் கட்டிக்கங்க என்று தங்களது சாய்ஸையும் கமெண்ட்டுகளில் போட்டுத் தாக்கிக் கொண்டிருக்கின்றனர். காரணத்தைக் கூறியும், காரணம் கூறாமலும் அவருக்காக மாப்பிள்ளையை செலக்ட் செய்து வருகின்றனர். ஒருவர், "ஐபிஎல் - இந்தியன் பதி லீக்கிற்கு வரவேற்கிறோம்" என்று எழுதி கலகலப்பை ஏற்படுத்தியுள்ளார்.

IIT, IIM போன்ற  கல்வி நிறுவனங்களில் படித்து கை நிறைய சம்பளம் வாங்குபவர்களுக்கே இந்த நிலைதானா என்றும் பலர் மனக்குமுறல்களை வீசியும் வருகின்றனர்.  அந்தக் காலத்தில் பெண்களை பாடச் சொல்வார்கள், டான்ஸ் ஆடச் சொல்வார்கள்.. அதை வைத்து செலக்ட் செய்தனர். இப்போது அது தலைகீழாக மாறி விட்டது..  சமுதாயத்தில், நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில் எப்பொழுதும் இது போல ஏதாவது ஒரு பாகுபாடு இருந்து கொண்டே வருகிறது என்றும் சிலர் கூறியுள்ளனர்.

"கமாடட்டி"யாக கருதப்படும் இந்தியத் திருமணங்களின் நிலையைப் இது பிரதிபலிப்பதாக இந்தச் சூழல் உள்ளது என்று பலர் சுட்டிக்காட்டினர். ஆக மொத்தத்தில், இந்தியாவில் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களின் நிலை குறித்த சூடான விவாதத்தை இது தூண்டியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்